சேலம் மாவட்டத்தில் மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவின் பலர் இணைந்த விழாவில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள் நாம் எட்டு வழி சாலை கொண்டு வரும்போது வேண்டாம்,  வேண்டான்னு தடுத்து நிறுத்துனாங்க. இப்போ அந்த துறையினுடைய நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏவா.வேலு, நெடுஞ்சாலை துறை அமைச்சராகிய உடனே 8 வழிச் சிலை இன்னைக்கு வேணுங்கிறாரு.

கிராமத்தில் சொல்லுவாங்க… மாமியார் உடைச்சா,  மண் குடம். மருமகள் உடைச்சா பொன் குடன்னு, சொல்லுவாங்க. அதே மாதிரி நாம கொண்டு வந்தா மோசம் என்று சொல்றாங்க. அவங்க கொண்டு வந்தா சரின்னு சொல்றாங்க. ஏவா வேலு அவர்களே…  இந்த எட்டு வழி சாலையை எதிர்த்து திருவண்ணாமலையிலே மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்.

நான் வேக வேகமாக, துரிதமாக, பத்தாயிரம் கோடி ரூபாயில் பிரம்மாண்டமான சாலை, உலகத்தரதிற்கேற்ற சாலை. இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய பசுமை வழிச் சாலையை உருவாக்குவதற்காக திட்டமிட்டு,  மத்திய அரசிடம் போராடி, வாதாடி, பெற்று…  அந்த நில அளவெல்லாம் செய்த பிறகு…  இந்தப் பணியை துவங்கணும். இதுவரைக்கும் விவசாய நிலம் எந்த விதத்திலும் பாதிக்காத அளவுக்கு…  இதுவரை நிலம் எடுப்பதற்கு இழப்பீட்டுத் தொகை இவ்வளவு பெரிய தொகை வாங்கியதே கிடையாது என தெரிவித்தார்.