“ரகுவரன் மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால்”… நினைவு நாளில் மனைவி ரோகினி உருக்கம்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் கலக்கியவர் ரகுவரன். இவர் ரஜினியுடன் சேர்ந்து நடித்த பாட்ஷா திரைப்படம் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படம். தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த ரகுவரன் கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார்.

இன்று ரகுவரனின் 15-ம் ஆண்டு நினைவு தினம். ரகுவரனின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய மனைவியும் நடிகையுமான ரோகினி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். ‌ அந்த பதிவில் ரகு இன்று உயிரோடு இருந்திருந்தால் இன்றைய சினிமாவை ரசித்து இருப்பார். ஒரு நடிகராக மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் ரோகினிக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Leave a Reply