திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, கவர்னர் உடைய உரையிலே அண்ணாவுடைய பெயர், பெரியாருடைய பெயர், பெருந்தலைவர் காமராஜர் உடைய பெயர், தமிழ்நாடு இதையெல்லாம் விடுத்துவிட்டு பேசக்கூடிய அளவிற்கு தைரியம் வந்திருக்கிறது என்று சொன்னால்…

தைரியம் இல்லை, அந்த ஆளுக்கு கை, கால் எல்லாம்  உதறுகிறது. நான் பார்த்தேன். கொஞ்சம் கண் சாடையை  காட்டி இருந்தால் வீட்டுக்கு போயிருக்க முடியுமா ? இந்த வேலையை செய்வதற்கு  பல்கலைகழகத்துக்கு போய் படித்து பட்டம் வாங்கிட்டா வர வேண்டும்.

எது கிடைத்தாலும் தூக்கி அடி என சொன்னால் அடிச்சிட்டு போயிட்டே இருப்பான். இதுக்கு என்ன ஸ்பெஷல் கோர்ஸ் ஏதாவது தேவையா ?  தலைவர் நினைத்திருந்தால்….  முதலமைச்சரை நினைத்திருந்தால்….  அவை முன்னவர் துரைமுருகனை எழுந்திருத்து,

கவர்னரை இந்த அவையில் இருந்து வெளியேற்றுகிறோம் என்று சொல்லி இருந்தால், என்ன கழட்டி இருப்ப நீ ? இன்றைக்கு சட்டமன்றத்தில் தமிழகத்தினுடைய முதல்வர் தகர்த்து எறியக்கூடிய வகையில் வரலாற்று சிறப்பு எழுதி காட்டியிருக்கிறார்.

சட்டமன்றத்தில் இன்றைக்கு கவர்னையே ஓட விட்டிருக்கிறார். நான்  பெருமைக்காக சொல்லலை. இதில்ஜெயலலிதா இருந்திருந்தால் அந்த ஆளு உதை வாங்காமல் போயிருக்க மாட்டான் என தெரிவித்தார்.