சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கேழ்வரகு இட்லி…!!

உடலுக்கு ஆரோக்கியமான கேழ்வரகு இட்லி செய்வது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சமைக்க தேவையான பொருள்:

உளுத்தம் பருப்பு – 3/4 கப்

கேழ்வரகு மாவு – 2 கப்

உப்பு – 1 தே.கரண்டி

 

செய்முறை:

முதலில் உளுத்தம் பருப்பினை குறைந்தது 1 மணி நேரமாவது ஊறவைக்கவும். ஊறவைத்த உளுத்தம் பருப்பினை, இட்லிக்கு அரைப்பது போல மைய அரைத்து கொள்ளவும். பிறகு கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும். கரைத்து வைத்த கேழ்வரகு மாவுடன் உப்பு + அரைத்த உளுத்தம் மாவினை சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.

கேழ்வரகு இட்லி க்கான பட முடிவு

பின்பு மாவை குறைந்தது 7 மணி நேரம் வைத்து புளிக்கவிடவும். இந்த மாவுக் புளிக்க , அரிசி மாவினை விட கொஞ்சம் நேரம் எடுக்கும். புளித்த இட்லி மாவினை, இட்லி தட்டில் ஊற்றவும். இதனை இட்லி வேகவைப்பது போல 1௦ நிமிடங்கள் வேகவிடவும். பின்பு எடுத்து பரிமாறலாம்.