2023 உலக கோப்பையில் அனைத்து அணிகளும் எங்கு? எப்போது? யாருடன் மோதும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

2023 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை இந்தியா நடத்துவது அனைவரும் அறிந்ததே. இந்த உலக கோப்பை திருவிழா இன்று முதல் இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இன்று தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகிறது. போட்டி சரியாக 2 மணிக்கு தொடங்கும். 

இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8ஆம் தேதி சென்னை சேப்பாக் சிதம்பரம் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது. மேலும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. மேலும் முதல் அரையிறுதி போட்டி நவம்பர் 15ல் மும்பையிலும், 2வது அரையிறுதி நவம்பர் 16ஆம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது. இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

இந்த தொடர் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும். இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் மற்ற 9 அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும். இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டியில் மோதும். இந்தப்போட்டிகள் அனைத்தும் தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக பார்க்கலாம். அதேபோல செல்போன் மற்றும் லேப்டாப்பில் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் இலவசமாக பார்க்கலாம். இந்நிலையில் அனைத்து அணிகளும் எங்கு எப்போது மோதும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒரு சில நாளில் காலை,மாலை என 2 போட்டிகள் ஒரே நாளில் நடக்கும். காலை 10:30 மணி மற்றும் மதியம் 2 மணிக்கு போட்டிகள் நடைபெறும்.

அக்டோபர் 5 இங்கிலாந்து vs நியூசிலாந்து (அகமதாபாத்)

அக்டோபர் 6 பாகிஸ்தான் vs நெதர்லாந்து (ஹைதராபாத்)

அக்டோபர் 7 பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் (தர்மசாலா)

அக்டோபர் 7 தென்னாப்பிரிக்கா vs இலங்கை (டெல்லி)

அக்டோபர் 8 இந்தியா vs ஆஸ்திரேலியா (சென்னை)

அக்டோபர் 9 நியூசிலாந்து vs நெதர்லாந்து (ஹைதராபாத்)

அக்டோபர் 10 இங்கிலாந்து vs பங்களாதேஷ் (ஹைதராபாத்)

அக்டோபர் 10 இலங்கை vs பாகிஸ்தான் (ஹைதராபாத்)

அக்டோபர் 11 இந்தியா vs ஆப்கானிஸ்தான் (டெல்லி)

அக்டோபர் 12 ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா (லக்னோ)

அக்டோபர் 13 பங்களாதேஷ் vs நியூசிலாந்து (சென்னை)

அக்டோபர் 14 இந்தியா vs பாகிஸ்தான் (அகமதாபாத்)

அக்டோபர் 15 இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான் (டெல்லி)

அக்டோபர் 16 ஆஸ்திரேலியா vs இலங்கை (லக்னோ)

அக்டோபர் 17 தென்னாப்பிரிக்கா vs நெதர்லாந்து (தர்மசாலா)

அக்டோபர் 18 நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் (சென்னை)

அக்டோபர் 19 இந்தியா vs பங்களாதேஷ் (புனே)

அக்டோபர் 20 ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் (பெங்களூர்)

அக்டோபர் 21 இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா (மும்பை)

அக்டோபர் 21 நெதர்லாந்து vs இலங்கை (லக்னோ)

அக்டோபர் 22 இந்தியா vs நியூசிலாந்து (தர்மசாலா)

அக்டோபர் 23 பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் (சென்னை)

அக்டோபர் 24 தென்னாப்பிரிக்கா vs பங்களாதேஷ் (மும்பை)

அக்டோபர் 25 ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து (டெல்லி)

அக்டோபர் 26 இங்கிலாந்து vs இலங்கை (பெங்களூர்)

அக்டோபர் 27 பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா (சென்னை)

அக்டோபர் 28 ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து (தர்மசாலா)

அக்டோபர் 28 நெதர்லாந்து vs பங்களாதேஷ் (கொல்கத்தா)

அக்டோபர் 29 இந்தியா vs இங்கிலாந்து (லக்னோ)

அக்டோபர் 30 ஆப்கானிஸ்தான் vs இலங்கை (புனே)

நவம்பர் 31 பாகிஸ்தான் vs பங்களாதேஷ் (கொல்கத்தா)

நவம்பர் 1 நியூசிலாந்து vs தென் ஆப்பிரிக்கா (புனே)

நவம்பர் 2 இந்தியா vs இலங்கை (மும்பை)

நவம்பர் 3 நெதர்லாந்து vs ஆப்கானிஸ்தான் (லக்னோ)

நவம்பர் 4 நியூசிலாந்து vs பாகிஸ்தான் (பெங்களூர்)

நவம்பர் 4 இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா (அகமதாபாத்)

நவம்பர் 5 இந்தியா vs தென் ஆப்பிரிக்கா (கொல்கத்தா)

நவம்பர் 6 பங்களாதேஷ் vs இலங்கை (டெல்லி)

நவம்பர் 7 ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் (மும்பை)

நவம்பர் 8 இங்கிலாந்து vs நெதர்லாந்து (புனே)

நவம்பர் 9 நியூசிலாந்து vs இலங்கை (பெங்களூர்)

நவம்பர் 10 தென்னாப்பிரிக்கா vs ஆப்கானிஸ்தான் (அகமதாபாத்)

நவம்பர் 11 ஆஸ்திரேலியா vs பங்களாதேஷ் (புனே)

நவம்பர் 11 இங்கிலாந்து vs பாகிஸ்தான் (கொல்கத்தா)

நவம்பர் 12 இந்தியா vs நெதர்லாந்து (பெங்களூர்)

நவம்பர் 15 முதல் அரையிறுதிப் போட்டி (மும்பை)

நவம்பர் 16 இரண்டாவது அரையிறுதிப் போட்டி (கொல்கத்தா)

நவம்பர் 19 இறுதிப் போட்டி (அகமதாபாத்)