ஐசிசி தரவரிசை …. கோலியை பின்னுக்கு தள்ளி ….. முதலிடத்தை பிடித்த பாபர் அசாம் ….!!!

ஐசிசியின் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன்  விராட் கோலி 2வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார்

ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் 873 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பிடித்தார் . இந்நிலையில் ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி 857 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார். இதையடுத்து ரோகித் சர்மா 825 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

இதைத்தொடர்ந்து பந்துவீச்சாளர்களுக்கு தரவரிசைப் பட்டியலில் நியூசிலாந்து அணி வீரர் டிரெண்ட் போல்ட்  737 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் வங்காளதேச அணி வீரர் மெகிடி ஹசன் 713 புள்ளிகளை பெற்று 2-வது இடத்திலும், கிறிஸ் வோக்ஸ் 711 புள்ளிகளைப் பெற்று 3-வது இடத்திலும் உள்ளனர். இதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா 690 புள்ளிகளைப் பெற்று 6-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *