ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவராக …..சவுரவ் கங்குலி நியமனம் …..!!!

ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவர் பதவிக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார் .

இந்திய அணியின் முன்னாள் வீரரான அனில் கும்ப்ளே கடந்த 2012 – ஆம் ஆண்டு முதல் ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவராக பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் அவருடைய பதவிக்காலம் தற்போது முடிவடைந்துள்ளதையடுத்து அந்தப் பதவிக்கு பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் கிரிக்கெட் விதிமுறைகள் தொடர்பான முக்கிய முடிவுகளை ஐசிசி குழு தீர்மானித்து வருகின்றது .

இந்நிலையில் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலியின் அனுபவம் ஐசிசியின் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உதவியாக இருக்கும். கடந்த 9 ஆண்டுகளாக டிஆர்எஸ் விதிமுறையை மீறிய பந்துவீச்சு உட்பட பல முக்கியமான முடிவுகளின் மூலமாக சர்வதேச கிரிக்கெட் தொடரில் அனில் கும்ப்ளே  முன்னேற்றம் ஏற்படுத்தியுள்ளார் என ஐசிசி தலைவர் கிரேக் பார்கிளே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *