அவர நான் கட்டப்பான்னு தா கூப்பிடுவேன்…. நடிகர் கார்த்தி பேட்டி…!!

சுல்தான் பட நடிகர் ஒருவரை நான் கட்டப்பான்னு தான் கூப்பிடுவேன் என்று கார்த்தி கூறியுள்ளார்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள படம் சுல்தான்.ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்திருந்த லால் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக உள்ளது.

கார்த்தி - லால்

இந்நிலையில் கார்த்தி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் லால் இப்படத்தில் நடித்திருப்பதைப் பற்றி கூறியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, லால் சார் இந்த படம் முழுக்க என்னுடனே இருந்து ஒவ்வொரு உணர்வுகளிலும் பங்கேற்பார். சொல்லப் போனால் அவரை நான் கட்டப்பா என்றுதான் கூப்பிடுவேன். மேலும் அவரது உணர்வு, சண்டை மற்றும் நடனம் அனைத்தும் பயங்கரமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.