நான் தேவையற்ற பெண் குழந்தையாகவே இருந்தேன்…. கங்கனா ரனாவத் ட்விட்…!!

தான் ஒரு தேவையற்ற பெண் குழந்தையாக இருந்தேன் என்று கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தலைவி என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்து உள்ளார். மேலும் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சுவாமி நடித்துள்ளார்.

இதற்கிடையில் சமூக வலைத்தளத்தில் தொடர்ச்சியாக சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வரும் கங்கனா ரணாவத் தற்போது தனது புகழ் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் ஒரு தேவையற்ற பெண் குழந்தையாக இருந்தேன். இன்று நான் சிறந்த மற்றும் ஆர்வமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பணிபுரிகிறேன்.

நான் என் வேலையை நேசிக்கிறேன். பணத்திற்காக அல்ல, புகழுக்காக அல்ல. உலகின் சிறந்தவர்கள் என்னைப் பார்த்து உங்களால் மட்டுமே இதைச் செய்ய முடியும் என்று சொல்லும்போது எனக்கு பெருமையாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.