செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சம வேலைக்கு, சம ஊதியம் தான் கேட்கிறார்கள். இதைக்கூட அரசாங்கம் செய்யவில்லை என்றால் அடுத்த கட்டமாக எல்லோரும்…  நான் மட்டுமல்ல, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களும் இவர்களுடன் சேர்ந்து போராடுகின்ற நிலைமை உருவாகி விடுமோ,  என்ற அச்சம் ஏற்படுகிறது.

தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருக்கின்றது என பேசுவது சிரிப்பாக இருக்கிறது. அவங்க அப்பா பேனாவை வைத்து எழுதுவாங்க என்றது, மக்கள் வரிப்பணத்தில் ஏதோ கடலு கடல போய்…. கடல்லுல தூக்கி போடுற மாதிரி… கடலில் 80 கோடிக்கு பேணா வைக்கிறாங்க. அதற்க்கு  பொதுமக்களுடைய கருத்து கேட்பதற்கு கூட்டம் வைத்திருக்கிறார்கள். இதான் சொல்லுறேன் நீரோ மன்னனுக்கும்,  ஸ்டாலினுக்கு வித்தியாசமே இல்லை என்றுதான் சொல்லணும்.

ஆசிரியர்கள் நியாயமான கோரிக்கைக்கு போராடி கொண்டு இருக்கும் போது, அரசாங்க பணத்தில் அவுங்க அப்பா எழுத்தாளர் என்பதால் பேனா  கடலில் வைப்பதற்கு 80  கோடி ரூபாய் நிதி எங்கிருந்து வருது. ரொம்ப வருத்தமாகவும்,  கேவலமாகவும் இருக்கிறது, இவர்களின் செயல்பாடு. இதைவிட ஒரு மோசமான அரசாங்கம் இனி தமிழ்நாட்டில் இருக்க முடியாது என்ற அளவுக்கு திராவிட மாடல் ஆட்சியைக் கொண்டு போய்க்கொண்டு இருக்கின்றார்கள்.

இது மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதும்,  அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை இல்லாமல் கொண்டு போய் விடுமோ ?  என்ற அச்சம் எல்லோருக்கும் இருக்கிறது.கெடுவான்,  கேடு நினைப்பான் என சொல்ற மாதிரி இந்த ஆட்சி போயிட்டு இருக்கு. நீரோ மன்னனுக்கும், ஸ்டாலினுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.இதனால் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துக்கு கூட கெட்ட பெயர் தான் வரும். முதலமைச்சருக்கு  அவங்க பையன் நடிக்கிற சினிமா, அவங்க பையன் டிஸ்ட்ரிக்ட் பண்ற சினிமாவை பார்பதற்க்கே நேரம் இருக்காது.விளம்பரங்களில் நடிப்பதற்க்கே நேரமில்ல்லை என விமர்சனம் செய்தார்.