எனக்கு இப்போ பணம் வேணும்…? தாயை தாக்கிய மகன்.. வழக்கு பதிவு செய்த போலீஸ்…!!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள இளங்காடு கீழத்தெருவில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். விவசாய தொழிலாளியான இவர் தன்னுடைய தாய் ராணியிடம் மது அருந்துவதற்காக பணம் கேட்டுள்ளார். அப்போது ராணி தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். மது அருந்ததற்காக பணம் கேட்டபோது இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த மாரிமுத்து தாயை தாறுமாறாக திட்டி கட்டையால் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply