“தமிழர்களின் இட்லி, தோசை, வடை எனக்கு மிகவும் பிடிக்கும்”…. உற்சாகமாக பேசிய மோடி.!!

தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது என்று ஐஐடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். 

ஐஐடியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தார்.  அங்கு பிரதமர் மோடிக்கு  ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ்  உட்பட அமைச்சர்கள் ரோஜா பூ கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.  பாஜகவின் சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்- ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா உட்பட தொண்டர்கள் வரவேற்றனர்.

பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு ஐஐடிக்கு சென்றார். அங்கு நிகழ்ச்சியில் இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வேற்றோருக்கு பரிசுகளை  வழங்கினார். பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி,   தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது. சென்னையில் காலை  இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அது உற்சாகம் தரக்கூடியது.

Image

மேலும் ஹேக்கத்தான் என்பது இளம் தலைமுறையினரின் அறிவுத்திறனை வளர்க்க உதவும். ஹேக்கத்தான் வெற்றிக்கும் உதவிய சிங்கப்பூர் கல்வித்துறை அமைச்சருக்கு எனது நன்றி என்றும் தெரிவித்தார். இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலராக வளர ஹேக்கத்தான் சந்திப்புகள்  உதவும். கட் சிற்பங்கள் பழமையான கோயிலுக்கு பெயர்போன மாமல்லபுரத்தை இங்கு வந்திருக்கும் வெளிநாட்டு மாணவர்கள் தவறாது சென்று பார்வையிட வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *