மும்பை தாக்குதலுக்கும் எனக்கும் தொடர்பும் கிடையாது…… இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத்

மும்பையில் நடந்த தாக்குதலுக்கும் தமக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத் தெரிவித்துள்ளார்.

2008_யில் மும்பையில் தாக்குதல் நடத்திய  தீவிரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பா மற்றும் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத இயக்கம் மீது நடவடிக்கை எடுக்க இந்தியாவின்   வலியுறுத்தலால் உலக நாடுகள் பலவும் பாகிஸ்தானுக்கு தொடர் நெருக்கடி கொடுத்தன. இதனால சுதந்திரமாக இருந்த ஹபீஸ் சயீத் மற்றும் அவரது கூட்டாளிகள் 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

மும்பையில்  தீவிரவாத தாக்குதலில் எனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை - ஹபீஸ் சயீத்

ஆனால் பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத் மீது தொடர்ந்த வழக்குகள் தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியது போன்ற பிரிவுகளின் கீழ் தான். மேலும் பாகிஸ்தானில் இந்த நடவடிக்கை வெறும்  கண்துடைப்பு நாடகம் என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில்  பாகிஸ்தான் லாகூர் உயர் நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த லஷ்கர் இ தொய்பா  இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத் கூறுகையில் , தன் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். மும்பையில் 2008-ம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் தமக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளார்.