“கூட்டணி குறித்து பேச எனக்கு அதிகாரமில்லை”…. நான் இப்ப கடன்காரனாகத்தான் இருக்கிறேன்….. பாஜக அண்ணாமலை வேதனை…!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜக மற்றும் அதிமுக கூட்டணி குறித்து பேச எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதற்கான நேரம் வரும்போது நான் பேசுகிறேன். தமிழ்நாட்டு அரசியலில் பாஜகவின் தேர்தல் பிரச்சார வியூகம் தொடர்பான என்னுடைய கருத்துக்களை தலைமையிடத்தில் கூறியுள்ளேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

நான் எந்த அரசியல் கட்சிக்கும் அரசியல் கட்சி தலைவருக்கும் எதிரி கிடையாது. என்னுடைய கருத்தில் 50 சதவீதம் உடன்பாடு மற்றும் 50 சதவீதம் எதிர்ப்பு என்றாலும் என் கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். மேலும் நான் அரவக்குறிச்சி தேர்தலில் நான் காவல்துறையில் சிறுக சிறுக சம்பாதித்த அனைத்து பணத்தையும் செலவழித்து விட்டேன். தற்போது தேர்தல் முடிவடைந்த பிறகு நான் கடனாளியாக தான் இருக்கிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.

Leave a Reply