“தளபதி 65” படத்தில் நடிப்பதை பாக்கியமாக கருதுகிறேன்…. பிரபல நடிகை வெளியிட்ட பதிவு…!!

தளபதி 65 நடிப்பதை பாக்கியமாக கருதுகிறேன் என பிரபல மலையாள நடிகை பதிவிட்டுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் விஜய்யின் “தளபதி 65” திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த பூஜையில் இப்படத்தில் பணியாற்றும் பல பிரபலங்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரபல மலையாள நடிகை அபர்ணா தாஸும் பங்கேற்று இருந்தார். அதனால் அவரும் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார் என்பது உறுதியானது. இதுகுறித்து அபர்ணாதாஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “தளபதி 65 போன்ற மிகப்பெரிய படத்தில் நடிப்பதை பாக்கியமாக கருதுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CNEy-GNpo62/