இவ்வளவு சீக்கிரம் விட்டுப் பிரிவார் என்று எதிர்பார்க்கவில்லை…. கண் கலங்கிய கமல்…!!!

விவேக் இவ்வளவு சீக்கிரம் விட்டுபிரிவார் என்று எதிர்பார்க்கவில்லை என கமல் கண்கலங்கி பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக்.மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து திரை பிரபலங்களும், ரசிகர்களும் விவேக்கின் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், அரசியல்வாதியாகவும் வலம் வரும் கமலஹாசன் விவேக் குறித்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நடிகர் விவேக் தன்னுடன் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆர்வம் காட்டி வந்தார்.

அதன்படி அவருக்கு இந்தியன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அப்படத்தில் சில நாட்கள் மட்டுமே அவர் நடித்து இருந்தாலும் தன்னுடைய நினைவிலிருந்து நீங்க முடியாத அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் இவ்வளவு சீக்கிரம் விட்டுப் பிரிவார் என்று எதிர்பார்க்கவில்லை எனக் கண்கலங்கி பேசியுள்ளார் கமல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *