இணையதளத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் டெல்லியை சேர்ந்த பெண்மணி ஒருவர் பேருந்தில் பயணிக்கின்றார். டெல்லி அரசாங்கம் பெண்களுக்கு இலவச பஸ் சேவை வழங்குகிறது. அதன்படி பேருந்தில் பயணிக்கும் பெண்கள் டிடிசி பஸ்களில் டிக்கெட் எடுக்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தது. ஆனால் அவர்களுடன் வரும் குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டும். இதனால் அந்த பேருந்து நடத்துனர் குழந்தைக்கு டிக்கெட் எடுக்க வேண்டுமென்று, அந்த பெண்மணியிடம் கூறுகின்றார். அதற்கு அந்த பெண் எடுக்க முடியாது என்று கூறி சண்டை போடுகிறார். இந்த சண்டை வாக்குவாதமாக மாறத் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் மகன் டிக்கெட் எடுத்து விடுமாறு கெஞ்ச ஆரம்பிக்கிறார். ஆனால் அப்போதும் அந்த பெண் மனம் இறங்கவில்லை, கடைசிவரை அந்தப் பெண் தனது குழந்தைக்காக டிக்கெட் எடுக்க வில்லை. இதற்கிடையில் அந்த நடத்துனர் காசில்லை என்றால் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறியதற்கு, அந்த பெண் டென்ஷன் ஆகிறார். அருகில் இருந்த அவரது மகன் அழ தொடங்குகிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.