மிக உயர்ந்த ஒருமைப்பாட்டைக் கொண்ட மனிதர் அருண் ஜெட்லி என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி வயது (66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை, எக்மோ கருவி பொருத்தப்பட்டு டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாமல் அருண் ஜெட்லியின் இதயம் மற்றும் நுரையீரல் சரிவர இயங்கவில்லை.
தொடர்ந்து நேற்று இரவில் இருந்தே அருண் ஜெட்லியின் உடல்நிலை மோசமாக இருந்து வந்தது. இந்தநிலையில் இன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண் ஜெட்லி மதியம் 12 : 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உட்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதன்படி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரிதனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ஸ்ரீ அருண் ஜெட்லி ஜியின் குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. அவர் மிக உயர்ந்த ஒருமைப்பாட்டைக் கொண்ட ஒரு மனிதர் என்று அனுபவத்தில் இருந்து நான் சொல்ல முடியும். தேசம் துக்கப்படுகையில், இந்த நேரத்தில் என் எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடன் உள்ளன என்று உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
I offer my heartfelt condolences to the family & loved ones of Shri Arun Jaitley ji. I can say from experience he was a man with the highest integrity quotient. As the nation mourns, my thoughts are with his family in this time of grief. RIP #ArunJaitley pic.twitter.com/Xb9Nk5i9AD
— Ravi Shastri (@RaviShastriOfc) August 24, 2019