களைகட்டியது சென்னை …… தொடங்கியது IPL திருவிழா….!!

IPL 12_ஆவது சீசனை சென்னை ரசிகர்கள் மிக உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் .

12வது IPL 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகின்றது. IPL 12_ஆவது சீசன்  மே 2வது வாரம் வரை நடைபெற இருக்கின்றது . இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

இன்று நடைபெற இருக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் தல டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்_சும் , இந்திய கேப்டன்  விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றது . இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் M.A சிதம்பரம் ஸ்டேடியத்தில்  நடைபெறுகின்றது.

இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை காண ரசிகர்கள் மாலை 5.30 மணியில் இருந்தே மைதானத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். போட்டியை கான வந்த கிரிக்கெட் ரசிக , ரசிகைககள்  செல்பி எடுத்துக்கொண்டும் , முகத்தில் விருப்பமான கிரிக்கெட் வீரரின் பெயரை எழுதிக்கொண்டும் , கலர் வர்ணங்களை முகத்தில் பூசியபடியும் , கிரிக்கெட் வீரரின் பெயரிடப்பட்ட ஜெர்சியை அணிந்து கொண்டும் ரசிகர்கள் குவிந்தனர்.