கெட்ட வார்த்தை போட்டி… நான் தான் “FIRST AND BEST” புகழ்ந்து கொண்ட ஜெயக்குமார்..!!

மோசமான வார்த்தைகளை பேச வேண்டும்  என்ற போட்டி வைத்தால் நான்  தான்  முதலிடத்தை பெறுவேன்  என்று அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் குரூப்-4 தேர்வுக்கான ஒரு நாள் முகாம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ஜெயக்குமார். ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் அவரவர் பணியில்  சிறந்து விளங்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயிற்சி முகாம்கள்  நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். பின் செய்தியாளர்களை  சந்தித்த அவர்,

Image result for jayakumar

 சிதம்பரத்திற்கு நீதிமன்றம் முன் ஜாமீனை மறுத்த பின்பே சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அவர் ஓடி ஒளிவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று  என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பின் திமுகவை சேர்ந்த துரைசாமி ஒருமையில்  பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், மேடை போட்டு மோசமான வார்த்தைகளை பேச வேண்டும்  என்ற போட்டி வைத்தால் நான்  தான் முதலிடத்தை பெறுவேன்  என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.