”நான் தொழிலதிபர் அல்ல விவசாயி” தமிழக முதல்வர் பேட்டி…!!

நான் பெரிய தொழிலதிபர் அல்ல , நான் ஒரு விவசாயி என்று சென்னை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் மேற்கொள்கின்றார். இன்று கிளம்பும் அவர் வருகின்ற 10-ஆம் தேதி தமிழகம் திரும்புவார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்காக இன்று காலை தமிழக முதல்வர் சென்னை விமானநிலையம் வந்தார். அங்கு அவருக்கு துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ,தமிழகத்திற்கு புதிய தொழில் தொடங்குவதற்காக  வெளிநாடு செல்கின்றோம். நான் பெரிய தொழிலதிபர் அல்ல நான் விவசாயி . இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.  புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தில் வர வேண்டும் .படித்து வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும். அதனால் பொருளாதார மேம்பாடு அடையும் அதுதான் எங்களுடைய நோக்கம் அதற்காகத்தான் வெளிநாடு சுற்றுப் பயணத்தை மேற்கொள்கின்றோம்.