மீண்டும் தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் நடிகை அமலா…!!!

தமிழ் பட உலகில் 1980-களில் முன்னணி நடிகையாக இருந்த அமலா மீண்டும் நடிக்க உள்ளார்.

அமலா தனது தமிழ் திரையுலகில் மைதிலி என்னை காதலி, வேலைக்காரன், மெல்ல திறந்தது கதவு,  அக்னி நட்சத்திரம், வேதம் புதிது, கொடி பறக்குது போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இந்நிலையில் அமலா 1992-ல் தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகிவிட்டார்.

amala க்கான பட முடிவு

 

அதன்பின்பு ஐதராபாத்தில் உள்ள விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பில் இணைந்து செயல்பட்டார். தற்போது மீண்டும் அமலா ஹை பிரீஸ்ட் என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும் தொடர்ந்து அம்மா, அக்கா, அண்ணி, போன்ற வேடங்களில் நடிக்க உள்ளதாக அமலா கூறியுள்ளார். தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடுவதாக தெரிவித்தார். அமலாவின் மகன் அகில் தெலுங்கு படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.