ராஜினாமா குறித்து என்னுடைய முடிவை தெள்ளத் தெளிவாக தெரியப்படுத்தியுள்ளேன் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் தனது ட்வீட்டர் பக்கத்தில் இப்போதைய சூழ்நிலையில் ராகுல் காந்தியால் மட்டுமே காங்கிரஸ் கட்சியை வழிநடத்த முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம், நாட்டிற்கும், நாட்டு மக்களுக்குமான நலனுக்கு அவருடைய அர்ப்பணிப்பு சமரசமில்லாதது, ஒப்பிடமுடியாதது, எனப் பதிவிட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி கூறுகையில் , நான் என்னுடைய முடிவை தெள்ளத் தெளிவாக தெரியப்படுத்தியுள்ளேன், நீங்கள் அனைவரும் அதை அறிவீர்கள்” என தெரிவித்துள்ளார்.