ஹூண்டாய் நிறுவனத்தின் ஹூண்டாய் க்ராண்ட் i10 நியோஸ் புதிய கார் இந்தியாவின் நம்பர் 1 காராக பெயரைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் தனது ஹூண்டாய் க்ராண்ட் i10 நியோஸ் புதிய காரினை இம்மாத இறுதியில் வெளியாக இருந்த நிலையில் தற்போது காரின் எரிபொருள் திறன் பற்றி தகவல்கள் லீக் ஆகியுள்ளது. மேலும் இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார்களின் பட்டியலில் முதலிடத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் i10 நியோஸ் கார் இடம்பெற்றுள்ளது.

மேலும் டீசல் ரக காரில் லிட்டருக்கு 28.4 கி.மீட்டரும், மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் காரில் மைலேஜானது 26.2 kmpl என்ற ரீதியிலும், பெட்ரோல் ரக காரில் i10 நியோஸ் காரின் மேனுவல் ரகமானது 20.7 kmpl என்ற ரீதியிலும், ஆட்டோமேட்டிக் ரக காரில் 20.5 kmpl என்ற ரீதி மைலேஜூம் கிடைக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கார்கள் முந்தைய i10 கார்களைவிட மாற்றி வடிவமைக்கப்பட்ட ஹெட்லைட், எல்இடி DRLs, சில்லவுட் வடிவமைப்பு, ஹூண்டாய் வெர்னாவின் தோற்ற அமைப்பைக் கொண்டதாக காணப்படுகிறது.
இந்த மாதம் இறுதியில் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் சூழலில் இன்று முதல் க்ராண்ட் i10 நியோஸ் கார்களுக்கான முன்பதிவானது தொடங்கியுள்ளது. மேலும் ஹூண்டாய் நிறுவனம் ஹூமற்றும் ண்டாய் ஆன்லைன் ஹூண்டாய் ஷோரூம்களில் வாடிக்கையாளர்கள் முன்பதிவாக 11 ஆயிரம் ரூபாய் செலுத்தி கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.