கெத்து காட்டும் ஹூன்டாய் நிறுவனம் … புதிய கிராண்ட் ஐ10 நியாஸ் ..!!

ஹூன்டாய் நிறுவனம் தனது கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் காரை இந்தியாவில் விற்பனை செய்ய உள்ளது . 

இந்தியாவில் ஹூன்டாய் நிறுவனம் தனது கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் காரை வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியிட இருக்கிறது. இந்த புதிய காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டது. இந்த கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது.  

இந்நிலையில், கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த புதிய ஹேட்ச்பேக் மாடல் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், மும்பை வீதிகளில் சோதனை செய்யப்பட்டது. மேலும் கிராண்ட் ஐ10 நியோஸ் ஐ10 பிராண்டிங்கில் மூன்றாம் தலைமுறை மாடலாகும்.

Image result for hyundai grand i10 neon

குறிப்பாக இந்த மாடல் ஏற்கனவே விற்பனையாகும் கிராண்ட் ஐ10 மாடலுடன் சேர்த்து விற்பனை செய்யப்பட உள்ளது . இந்த புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் காரில் ஹூன்டாயின் கேஸ்கேடிங் கிரில் வழங்கப்பட்டுள்ளது. இது காரின் முன்புறத்தை அகலமாக்கி ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகிறது. மேலும் என்ஜினை பொருத்தவரை கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.

Image result for hyundai grand i10 neon

 இந்த 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 83 பி.எஸ். பவர் மற்றும் 114 என்.எம். டார்க் செயல்திறனை வழங்குகிறது. இதன் டீசல் யூனிட் 75 பி.எஸ். பவர் மற்றும் 190 என்.எம். டார்க் செயல்திறனை வழங்குகிறது. மேலும் இரு என்ஜின்களும் AMT அல்லது 5-ஸ்பீடு MT டிரான்ஸ்மிஷனுடன் வரும் என கூறப்பட்டுள்ளது .