ஓசூரில் அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்த மனைவி சாந்தியை கொலை செய்து விட்டு தப்பிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த வடபொன்பரப்பியில் இளையராஜா மற்றும் சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இளையராஜா சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த நிலையில் 20 நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். இதையடுத்து தம்பதியினர் இருவரும் ஓசூர் அடுத்துள்ள சூளகிரியில் வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். அப்பகுதியில் இருக்கும் ஒரு அழகு நிலையத்தில் மனைவி சாந்தி வேலைபார்த்து வந்துள்ளார்.

இந்தநிலையில் சாந்தி காலை வீட்டில் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டு ஜன்னல் கம்பியில் கழுத்து கட்டப்பட்ட நிலையில், ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து தவலறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போலீசார் அவரது சடலத்தை மீட்டனர். கணவரான இளையராஜா தலைமறைவாகி உள்ளதால் அவர் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கித்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.