“நான் உன்னுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன்” காதல் கணவரின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!

முன்னாள் மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் காதல் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்திலுள்ள கே.ஜி.எப் நியூ கில்பர்ட்ஸ் பகுதியில் அருண் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இதில் பந்தல் அமைப்பாளரான இவர் ஒரு பெண்ணை 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஒரு வருடம் வாழ்ந்த பின் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் அந்த பெண் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருகின்றார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் மனைவியின் வீட்டிற்கு வந்த அருண்குமார் நான் உன்னுடன் மீண்டும் வாழ ஆசைப்படுகிறேன் உனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு விட்டு என்னுடன் குடும்பம் நடத்த வா என்று வற்புறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் மனைவி அருண்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பி வைத்துள்ளார்.

இதில் மனமுடைந்த அருண்குமார்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருண் குமாரின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுபற்றி அருண்குமாரின் அண்ணன் வசந்தகுமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *