குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலைசெய்த கணவன் கைது…!!

சங்கரன்கோவில் அருகில்  குடும்ப தகராறால் மனைவியை அரிவாளால் வெட்டிய  கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி  மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த நெல்கட்டும்செவல் கிராமத்தை சேர்ந்த சமுத்திரபாண்டி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சில மாதங்களாக விடுமுறை காரணமாக  சொந்த ஊரில் இருந்து வந்துள்ளார்.நீண்ட நாட்களாகவே கணவன் மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இன்று பிரச்னை முற்றியுள்ளது.

அப்போது ஆத்திரம் அடைந்த சமுத்திரபாண்டி  அவரது மனைவியான வெள்ளைதுரைச்சியை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.இதை  தடுக்க முயன்ற தனது 16 வயது மகளையும் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் அப்பெண்ணிற்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. மனைவியை கொலைசெய்த சமுத்திரபாண்டி புளியங்குடி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.