திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வி.குரும்பபட்டி பகுதியில் நடேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொழிற்சாலையில் தொழில்நுட்ப அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வைத்தீஸ்வரி என்ற மனைவி உள்ளார். திருமணத்தின்போது வைத்தீஸ்வரிக்கு 11 பவுன் தங்க நகை, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இந்நிலையில் வைத்தீஸ்வரி நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் தனது கணவர், மாமியார் ராஜாத்தி, மற்றும் கணவரின் உறவினர்களான மணிமேகலை, பிரித்விராஜ் ஆகிய நான்கு பேரும் இணைந்து கூடுதலாக 5 பவுன் நகை, 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை வரதட்சணையாக கேட்டு அடித்து துன்புறுத்துகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் நடேஷ் குமார் உள்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று நடேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர். மற்ற 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.