தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு அருகே காரைக்குடி மெயின் ரோட்டில் சந்தானம் – கற்பகம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். சந்தானம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவருடைய இடது கால்விரல் அகற்றப்பட்டு கால் அழுகியதால் தூக்கம் இல்லாமல் தவித்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவியும் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நோய் கொடுமையால் மனம் உடைந்த அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று மதியம் வீட்டில் தூக்கு போன்ற தூக்கு போட்டு கொண்டனர். இதனை பார்த்து அவரது மகள் சத்தம் போட்டுள்ளனர். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சந்தானம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். மேலும் கற்பகத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இறந்து போன சந்தானம் அண்ணன் பஞ்சநாதன் கொடுத்த புகாரின் பேரில் திருவையாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.