கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை…. கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!!

கடன் தொல்லையால் கணவன் – மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் பாபு – கிருஷ்ணவேணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடையை விரிவாக்கம் செய்வதற்காக சிலரிடம் கடன் வாங்கி உள்ளனர். எனவே கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு உள்ளனர். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த கிருஷ்ணவேணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வெளியே சென்ற பாபு வீட்டிற்கு வந்து பார்த்தபோது கிருஷ்ணவேணி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் மனைவி இறந்த துக்கத்தை தாங்க முடியாத இவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அக்கம்பக்கத்தினர் அரக்கோணம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கணவன்-மனைவி 2 பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *