எல்லாம் எப்படி போகுது…! அடுத்து என்ன பண்ணலாம்? 5ஆவது முறை பேசும் முதல்வர் …!

12ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்

தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த ஒருவார காலமாகவே ஒவ்வொரு நாளும் 500க்கும் மேற்பட்டோர் என்ற அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வருகின்ற 17ஆம் தேதி முதல் ஊரடங்கு நிறைவு பெற இருக்கின்ற நிலையில் தமிழக பல்வேறு விதமான தவறுகளை தமிழக அரசு கடந்த ஒரு வாரமாக காலமாகவே கொடுத்து வருகின்றனது. அந்தந்த மாவட்ட வாரியாக இருக்கக்கூடிய சூழலைப் பொறுத்து இந்த தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவிதமான தளர்வுகளும் இல்லை என்று  தமிழக அரசு அறிவித்துவிட்டது.

இந்த நிலையில் அந்தந்த மாவட்டங்களில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன ? அங்கு இருக்கக்கூடிய கள நிலவரம் என்ன ? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மாவட்ட ஆட்சியருடன் இந்த காணொலிக் காட்சி மூலமாக வருகின்ற 12ஆம் தேதி கேட்டறிவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.  கொரோனா தொற்று பரவிவரும் காலத்தில் தமிழக முதல்வர் ஐந்தாவது முறையாக காணொளியில் மாவட்ட ஆட்சியருடன் பேசுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *