சுவையான மீல் மேக்கர் குழம்பு செய்வது எப்படி…………..

சுவையான மீல் மேக்கர் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம் வாங்க.

செய்ய  தேவையான பொருட்கள்:

  • சோயா உருண்டைகள் – முக்கால் கப்
  • வெங்காயம் – 1
  • தக்காளி – 3
  • இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • வறுத்துப் பொடித்த சீரகம் – 2 டீஸ்பூன்
  • கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
  • மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
  • கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்
  • சோம்பு – ஒரு டீஸ்பூன்
  • எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
  • மிளகாய்த்தூள்
  • உப்பு – தேவையான அளவு

 

 

செய்யும் முறை:

முதலில்  வெங்காயத்தைப் பொடியாக நறுக்க வேண்டும். சோயாவைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடம் வைத்திருந்து, நன்றாகப் பிழிந்து கொள்ளவும். கொதிக்கும் நீரில் தக்காளியைப் போட்டு 2 நிமிடம் வைத்திருந்து எடுத்து கொண்டு, தோலினை உரித்து ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். எண்ணெய் சட்டியில் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு போட்டு தாளித்து, வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து வதக்கி… மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, அரைத்த தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிந்து வந்ததும், சோயா உருண்டைகளை சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர்  விட்டு, வறுத்துப் பொடித்த சீரகத்தைப் போட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். இப்பொளுது ருசி மிகுந்த மீல் மேக்கர்  குழம்பு ரெடி