உடலின் ஆரோக்கியத்திற்கு வெங்காயம் மசாலா டிஷ் செய்வது எப்படி…!!

நம் அன்றாட வாழ்வில்  பயன்படுத்தும் சமையல்களில் பலவிதமான காய்கறிகளை உபயோகப்படுத்திருப்போம்.அதிலும் குறிப்பாக வெங்காயத்தில் செய்யும் உணவுகள் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. வெங்காயம் ஒரு நல்ல மருந்து பொருள்.இதை இதயத்திற்கு நல்ல நண்பனாக செயல்படுகிறது.இவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை தடுத்து உடலில் சீராக ரத்தத்தை ஓட செய்கிறது. உடல் வளர்ச்சிக்கு வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாதுஉப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை அடங்கியுள்ளது. மேலும் இந்நிகழ்வில் வெங்காயம் மசாலா டிஷ் சமையலை பற்றி பார்ப்போம்.

 

வெங்காயம் மசாலா டிஷ் செய்ய தேவையான பொருட்கள்: 

தேவை :

பெல்லாரி வெங்காயம்                         –  1/4 கிலோ

உருளைக்கிழங்கு                                      –  3

பட்டாணி                                                        –  100 கிராம்

தக்காளி                                                           –  4

நல்லெண்ணெய்                                         –  50 கிராம்

வத்தல்                                                             –  6

சீரகம்                                                                –  1 மேஜைக் கரண்டி

மல்லி                                                              –  1 மேஜைக் கரண்டி

கடுகு ,மஞ்சள்                                              –  1 மேஜைக் கரண்டி

உப்பு                                                                  –  தேவையான அளவு

செய்முறை :

முதலில் வெங்காயத்தின் தோலை உரித்து கொள்ளவும். பிறகு வெங்காயத்தை அரைத்து வைத்து கொள்ளவும். இவற்றுடன் வத்தல் , மல்லி ,சீரகம் சேர்த்து அரைக்கவும். அடுப்பில் உள்ள  பாத்திரத்தை காயவைத்து சூடான பிறகு எண்ணெயை ஊற்ற வேண்டும். ஊற்றிய எண்ணெயின் மீது கடுகு , கருவேப்பிலைப் போட்டு முதலில் கடுகு பொரித்தவுடன்  வெங்காயத்தையும், தக்காளியையும் நன்றாக வதக்கவும். வாசனை வந்தவுடன் அரைத்து வைத்த மசாலாவை  போட்டு லேசாக  வாசனை வரும் வரை வதக்கிக் கொள்ளவும். வதக்கிய உடனே ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். நன்றாக கொதிக்கும் பொழுது வேக வைத்த பட்டாணி, ஏற்கனவே வேக வைத்து தோல் நீக்கிய உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் உப்பு, மஞ்சள் சேர்த்து கொதிக்க விடவும், குழம்பு எண்ணெய் தெளியவும் இறக்கினால் சுவையான வெங்காய மசாலா டிஷ் ரெடி..