சுவையான முட்டை பட்டாணி பொரியல் எப்படி செய்வது !!!

சாதத்திற்கு ஏற்ற ஒரு சூப்பரான  சைடிஷ் முட்டை பட்டாணி பொரியல் செய்யலாம் வாங்க . 
தேவையான பொருட்கள்:
பட்டாணி – 250
முட்டை – 5
பல்லாரி  – 1
பச்சை மிளகாய் – 1
மிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள்  – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு
முட்டை பட்டாணி க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் பட்டாணியுடன்  உப்பு சேர்த்து  வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் முட்டையுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி , அதில் நறுக்கிய  வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி, பின்  முட்டையை  ஊற்றி கிளற  வேண்டும். பின்னர்  இதனுடன்   பட்டாணி, மிளகுத்தூள்  சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான முட்டை பட்டாணி பொரியல் தயார் !!!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *