சுவையான கேரட் பொரியல் செய்வது எப்படி..!

நம் அன்றாட வாழ்வில் ஆரோக்கியமான வாழ்விற்கு  சத்து நிறைந்த உணவை சமைத்து சாப்பிடுவது முக்கியமானது.நோய்களின் எதிர்ப்பு சக்தியாக அமைகிறது. கேரட்டில் நார் சத்து அதிகம் இருப்பதால் உடலுக்கு நன்மை தருவது மட்டுமல்லால் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்தியை அளிக்கிறது.கேரட் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் மார்பக புற்று நோய் வராமல் ஆரம்ப நிலையிலே தடுக்க உதவுகிறது.வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும், நோய்களும் குணப்படுத்த கேரட்டிற்கு உண்டு.குடல்  (அல்சர் ) புண் உள்ளவர்கள் கேரட் தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் புண் சரியாகும்.இந்நிகழ்வில் கேரட் பொரியல் சமையல் பற்றி காண்போம்:

கேரட் பொரியல் செய்யத் தேவையான பொருட்கள்:

தேவை :

கேரட்                                    –  1/4 கிலோ

சி . வெங்காயம்                –  4

பச்சை மிளகாய்               –  3

தேங்காய்  துருவல்         –  1/4 முடி

கடுகு                                       –  1 டீஸ்பூன்

கறிவேப்பிலை                  –  1 கொத்து

எண்ணெய்                           –  2 டேபிள்  ஸ்பூன்

உப்பு                                         –  தேவையான  அளவு

செய்முறை :  

முதலில் கேரட்டை தண்ணீரால் கழுவி தோல் நீக்கி துருவியால் துருவிக் கொள்ள வேண்டும் .பிறகு வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை சூடாக வைத்த பிறகு எண்ணெய்யை ஊற்றி கடுகு ,கருவேப்பிலை,அதனுடன் கேரட் துருவல் சேர்த்து தாளிக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 30 நிமிடம்  வேக விடவும். தேவையான அளவு  உப்பு சேர்த்து கொள்ளவும். கேரட் பொரியலை அடுப்பில் இருந்து இறங்கியவுடன் தேங்காய் துருவலை சேர்த்து கிண்ட வேண்டும். சிறிது நேரம் கழித்த பிறகு சூடான சுவையான கேரட் பொரியல் ரெடி,