மணக்க மணக்க கொத்தமல்லி ரசம் செய்வது எப்படி !!!

மணக்க மணக்க கொத்தமல்லி ரசம் செய்யலாம் வாங்க..

தேவையான  பொருட்கள் :

கொத்தமல்லி இலை  – 1  கட்டு

தக்காளி – 4

தனியா – 2  டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் –  5

மிளகு –  1/2  டீஸ்பூன்

சீரகம் –  1  டீஸ்பூன்

கடுகு –  1/4  ஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் தக்காளியுடன்  கொத்தமல்லி இலை , தனியா, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ள  வேண்டும். இதனுடன்  தேவையான  அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்தால் சுவையான கொத்தமல்லி ரசம்  தயார் !!!