தேங்காய் சாதம்
தேவையான பொருட்கள் :
அரிசி – 2 கப்
துருவிய தேங்காய் – 1 கப்
கடுகு – 1/2 ஸ்பூன்
கடலை பருப்பு – 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காய பொடி – சிறிது
பச்சை மிளகாய் – 4
வறமிளகாய் – 6
முந்திரி பருப்பு – 10
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – தேவையானஅளவு
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
முதலில் அரிசியை பக்குவமாக , உதிரியாக வேகவைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் உளுந்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியாக வறுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் தேங்காய் எண்ணையை ஊற்றி கடுகு , கடலை பருப்பு , பச்சை மிளகாய் , வறமிளகாய் , கருவேப்பிலை , பெருங்காய பொடி , உப்பு போட்டு , துருவிய தேங்காய் , வறுத்து வைத்திருக்கும் முந்திரி, உளுந்த பருப்பையும் போட்டு நன்றாக கலந்து விட வேண்டும். இப்போது சாதத்தை போட்டு கிளறி இறக்கினால் சுவையான தேங்காய் சாதம் தயார் !!!