சூப்பரான சுவையில் செட்டிநாடு வத்தல் குழம்பு செய்வது எப்படி !!!

செட்டிநாடு வத்தல் குழம்பு

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் – 100 கிராம்

பூண்டு –  50 கிராம்

சுண்டு வத்தல் –  10

தக்காளி –  1

புளி – எலுமிச்சையளவு

குழம்பு மிளகாய்த்தூள் –  2 தேக்கரண்டி

உப்பு –  தேவைக்கு ஏற்ப

கடுகு – 1 /4 தேக்கரண்டி

உளுந்தம் பருப்பு –  1 /4 தேக்கரண்டி

சீரகம் – 1 /4 தேக்கரண்டி

மிளகு – 1 /4 தேக்கரண்டி

வெந்தயம் – 1 /4 தேக்கரண்டி

பெருங்காயம் – சிறிதளவு

நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை – தேவையான அளவு

வத்தல் குழம்பு க்கான பட முடிவு

செய்முறை:

ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு ,உளுந்தம் பருப்பு  , சீரகம்  ,  மிளகு , வெந்தயம் , பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து பின் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து  வதக்கிக் கொள்ள வேண்டும். இதனுடன்   தக்காளி , குழம்பு மிளகாய்த்தூள், புளிக்கரைசல்,  உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.கடைசியாக சிறிது எண்ணெயில் சுண்டைக்காய் வற்றலை பொறித்து குழம்பில் கொட்டி இறக்கினால் சுவையான செட்டிநாடு வத்தல் குழம்பு தயார் !!!