நம் உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் பீட்ருட் நம் உடலின் ஆக்சிஜன் உறிஞ்சும் சக்தியை அதிகரிக்கிறது.பெண்களின் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதாகவும், கருத்தரிக்கும் பெண்களின் உடல் நலத்திற்கு சிறந்த மருந்தாகவும் அமைகிறது. நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் பீட்ரூட் சூப் சமைப்பது பற்றி பார்ப்போம்:

பீட்ரூட் சூப் செய்ய தேவையான பொருட்கள் :
தேவை :
பீட்ருட் – 1/4 கிலோ
பெ. வெங்காயம் – 1
உருளைக்கிழங்கு – 1
எலுமிச்சம் பழம் – பாதி
புதினா – சிறிதளவு
கிரீம் – 1/2 கப்
மிளகு தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
முதலில் பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கை தோல் நீக்கி வேக வைக்கவும். பெல்லாரி வெங்காயத்தை சிறியதாக நறுக்கி சூடான எண்ணெயில் தாளித்து வேக வைத்து கொள்ளவும். தாளித்த வற்றை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். பின்பு அதில் எலுமிச்சை பழத்தை பிழிந்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அதில் மிளகுதூள், உப்பு சேர்க்கவும். தண்ணீர் தேவைக்கு ஏற்ப சேர்க்கவும். சூப் நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி கிரீம், புதினா சேர்த்து பருகினால் சுவையான பீட்ரூட் சூப் ரெடி.