சத்துக்கள் நிறைந்த சுவையான கம்புலட்டு செய்வது எப்படி என்று இங்கே பார்ப்போம் .
தேவையான பொருட்கள் :
கம்பு – 1 கப்
வெல்லம் – 3
தேங்காய் துருவல் – 1 கப்
ஏலக்காய் – 3

முதலில் ஒரு கடாயில் கம்பை போட்டு பொன்னிறமாக வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் துருவிய அச்சு வெல்லம், தேங்காய் ,ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியான உருண்டைகளாக பிடித்து பரிமாறினால் சுவையான கம்புலட்டு தயார் !!