வற்றல்குழம்புப்பொடி
தேவையான பொருட்கள் :
தனியா – 1/4 கப்
காய்ந்த மிளகாய் – 1/2 கப்
கடலைப்பருப்பு – 1/4 கப்
உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
மிளகு – 1/4 கப்
சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 2 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
முதலில் ஒரு கடாயில் மேலே கூறியுள்ள ஒவ்வொரு பொருட்களையும் தனித்தனியே வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் இவை ஆறியதும் அரைத்து எடுத்தால் வற்றல்குழம்புப்பொடி தயார் !!!