தாய்பால் சுரப்பை தூண்டும் மருந்துசோறு செய்வது எப்படி ..!!

 குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும், பூப்படைந்த பெண்களுக்கும், அதிக உதிரப்போக்கு உள்ளவர்களுக்கும், கருப்பை ஆரோக்கியத்திற்கும்,தாய்பால் அதிகமாக சுரப்பதற்கும் உதவும் மருந்துசோறு செய்வது எப்படி என்று காண்போம் .

தேவையான பொருட்கள்:

அரிசி-1கப்

தேங்காய் பால்-1கப்

தண்ணீர்-2கப்

மருந்து பொடி-3 டேபிள்ஸ்பூன்

பூண்டு-2

தொடர்புடைய படம்

மருந்து பொடி செய்ய:
சதகுப்பை-50 கிராம்
மருந்து சாத பட்டை கருவா-50கிராம்
சீரகம்-25 கிராம்
சாலியா-100 கிராம்
தொடர்புடைய படம்

தாளிப்பதற்கு :

சின்ன வெங்காயம்-1கப்

நல்லெண்ணெய்-50மில்லி

கருவா-2

கிராம்பு-3

ஏலம்-3

இஞ்சிபூண்டு விழுது-1 டேபிள் ஸ்பூன்

தயிர்-2 டேபிள்ஸ்பூன்
ரம்பஇலை- கொஞ்சம்
oil cook க்கான பட முடிவு

செய்முறை:

ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் தேங்காய் பால்,2 கப் தண்ணீர், 3 டேபிள்ஸ்பூன் மருந்து சாத பொடி சேர்த்து கலந்து பின் குக்கரில் எண்ணெய் ஊற்றி சிறிது வெங்காயம் மற்ற தாளிப்பு பொருளை சேர்த்து நன்கு வதக்கி,கொள்ளவேண்டும் . இதனுடன்  வெங்காயம்,முழு பூண்டு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து வதக்கி, அரைத்து வைத்துள்ள மருந்து பொடி கலவையை சேர்த்து தேவைக்குஏற்ப  உப்பு போட்டு கொதிக்க வைக்கவேண்டும் .பின்20 நிமிடம் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து நன்கு கிளறி,2 விசில் விட்டு 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கினால் சுவையான மருந்து சோறு ரெடி ..!!