எதிர்கட்சியினரை கூட சமாளித்து விடலாம் ஆனால் நம் கட்சியினரை சமாளிக்க முடிய வில்லை என்று MLA தோப்பு வெங்கடாச்சலம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக படு தோல்வி அடைந்தது. அதே சமயம் சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றியால் இந்த ஆட்சி தப்பியது. அதோல்வியையடுத்து அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று பல்வேறு பிரச்சனைகளை அதிமுக MLA-க்கள் கிளப்பினார். இதையடுத்து அதிமுக தலைமை கட்சி விவகாரங்களை யாரும் பொது வெளியில் பேச கூடாது என்ற கட்டுப்பாடு விதித்தது.

இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் , பெருந்துறை தொகுதி MLA_ வுமான தோப்பு வெங்கடாச்சலம் செய்தியாளர்களிடம் பேசியது மீண்டும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.அதில் , அ.தி.மு.க.வில் அதிகார பலத்துடன் இருப்பவர்கள் எதிர்கட்சிகளுக்கு துணை போனார்கள். கட்சியில் அவர்களின் துரோகத்தை கட்சியின் தலைமையிடம் ஆதாரத்துடன் கொடுத்தும் கட்சி தலைமை அதை கண்டு கொள்ளாமலும் , எந்த வித நடவடிக்கையும் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது உரிய ஆதாரத்துடன் புகார் கொடுத்தும் கட்சி தலைமை கண்டுக் கொள்ளாமல் மவுனம் சாதிப்பது ஏன்? இந்த மவுனம் தொடர்ந்தால் உள்ளாட்சி தேர்தலிலும் பெரும் பாதிப்பு ஏற்படும்.அடிமட்ட தொண்டர்களை மதிக்காமல் இருப்பது நல்லதாக அமையாது. எதிர்கட்சியினரை சமாளித்து விடலாம். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் நமது கட்சியினரை சமாளிக்கவே பெரும் சவாலாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளது அதிமுகவில் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.