இன்றைய நாள் 14.01.2020 எப்படி இருக்கு?…. முழு ராசிபலன் இதோ..!!

மேஷம் ராசி அன்பர்களே…!! இன்று விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள் ஆக இருக்கும். வளர்ச்சி கூடும், வாய்ப்புகள் வந்து சேரும், வாழ்க்கைத் துணை வழியே வரவு வந்து சேரும், கல்யாணக் கனவுகள் நனவாகும், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இன்று விழிப்புடன் இருப்பது எப்போதுமே நல்லது. சுப செலவுகள் கொஞ்சம் இருக்கும், கையிருப்பு கரையும், தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

நண்பர்களுடன் சுமுகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை கொஞ்சம் இருக்கும். கவலை வேண்டாம், அனைத்தும் சரியாகும். பணவரவுகள் திருப்திகரமாகவே இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். இன்று பணவரவில் எந்தவித பிரச்சினையும் இல்லை. இன்று  மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். மேற்கல்விக்கான  முயற்சியில் வெற்றி கிடைக்கும். விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் செல்லும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை  கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப  நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்

 

ரிஷப ராசி அன்பர்களே…!! அந்தஸ்து உயரும் நாளாக இருக்கும். அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். எதிரிகள் இன்று உதிரிகள் ஆவார்கள்.  பயணங்கள் பலன் தரும். ஆதாயம் இன்று சிறப்பாக தான் இருக்கும். கடன்களை அடைக்க புதிய யுக்திகளை கையாளுவீர்கள். இன்று பிள்ளைகள் கல்விக்கான செலவு கூடும். இருந்தாலும் தேவையானவற்றை வாங்கி தருவீர்கள். அடுத்தவர்களின் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் இருக்கும்.

இன்று எந்த ஒரு விஷயத்தையும் கவனமாகவே மேற்கொள்ளுங்கள். வீண் விவாதங்களை விட்டு விலகிச் செல்வது ரொம்ப நல்லது. இன்று கல்வியில் மாணவர்களுக்கு தேர்ச்சி ஏற்படும். விளையாட்டு துறையிலும் மற்றும் அனைத்து துறைகளிலுமே மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். இன்றைய நாள் மன மகிழ்ச்சி கொள்ளும் நாளாக இருக்கும், முடிந்தால்  இன்று ஆலயம் சென்று வாருங்கள். மேலும் மனம் நிம்மதியாக காணப்படும்.

இன்று முக்கிய பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை  கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அணைத்து காரியங்களும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் கரும் பச்சை நிறம்

 

மிதுனம் ராசி அன்பர்களே..!!இன்று நன்மைகள் நடைபெறும் நாள் ஆக இருக்கும். நாடாளும் நபர்களின் நட்பு கிட்டும்.  பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.

இன்று  எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும், லாபம் உயரும், பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில்  இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்படும். வேலைப்பளு குறையும். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர் வருகையால் செலவு கொஞ்சம் கூடும்.  மனதில் புதிய தெம்பும் உற்சாகமும் தோன்றும்.  எதிர்பாராத உதவியால் நன்மையும் ஏற்படும்.

இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமும் விளையாட்டுத் துறையில் ஆர்வம் மிகுந்து காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருக பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து  காரியமுமே சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நீலம்

 

கடகம் ராசி அன்பர்களே…!! இன்று இனிய செய்திகள் இல்லம் தேடி வரக்கூடும். பழைய வாகனத்தை மாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும். பெற்றோர் வகையில் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். வீட்டில் சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். இன்று பெற்றோர் வழியில் பிரியம் கூடும், மனதில் துணிச்சலும் கூடும். திட்டமிட்டபடி செயலாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள்.

இன்று மாணவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள். எல்லா கஷ்டங்களும் நீங்கும். மனதில் நிம்மதி உண்டாகும். தொழில் வியாபாரம் இழுபறியாக இருந்தாலும் எந்த பிரச்சினையும் இல்லை, சிறப்பாக தான் இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். காரிய முடிவில் தாமதமான போக்கு காணப்பட்டாலும் முடிவில் நல்ல  பலனை கொடுப்பதாகவே அமையும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருக பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை :வடக்கு

அதிஷ்ட  எண்: 2 மற்றும் 6

அதிஷ்ட நிறம்:  நீலம் மற்றும் பச்சை நிறம்

 

சிம்மம் ராசி அன்பர்களே…!! இன்று மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாளாக  இருக்கும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். சகோதர சச்சரவுகள் நீங்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் இருக்கும்.

பிள்ளைகளின் செயல்கள் சந்தோசத்தை கொடுக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தி அடைவீர்கள். யாரையும் நேருக்கு நேராக எதிர்க்காமல் அனுசரித்துச் செல்வது நன்மையை கொடுக்கும். கெட்ட கனவுகள் தோன்றும். வயிறு தொடர்பான நோய்கள் கொஞ்சம் ஏற்பட்டு நீங்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அது அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருக பெருமான்  வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிஷ்டமான திசை:தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்

 

கன்னி ராசி அன்பர்களே..!! இன்று தன வரவு தாராளமாக வந்து சேரும். தடைகள் அகலும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள், பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். விலகிச் சென்ற விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று எல்லா பிரச்சினைகளும் தீரும், மனமகிழ்ச்சி ஏற்படும். காரிய அனுகூலங்களும் உண்டாகும், மனோதிடம் அதிகரிக்கும், பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள், செல்வம் சேரும்.

வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. இன்று வாகனங்களில் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக செல்ல வேண்டும். நீண்ட தூரப் பயணங்களின் பொழுது ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து  காரியமும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை மற்றும் நீல நிறம்

 

துலாம் ராசி அன்பர்களே…!! இன்று பாராட்டும் புகழும் கூடும் நாளாக இருக்கும். பக்குவமாகப் பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். மாலையில் உறவினரால் விரையம் கொஞ்சம் உண்டாகும். இன்று உத்யோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும், வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்லலாமா என்று கூடத் தோன்றலாம்.

மனம் தளராமல் எதிலும் செயல்படுங்கள். குடும்பத்தில் அமைதி கொஞ்சம் குறையலாம், கணவன் மனைவிக்கு இடையே திடீர் மனஸ்தாபங்கள் கூட ஏற்படலாம். பெண்களுக்கு கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் கருத்து வேற்றுமை நீங்கி மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். மனதில் புதிய தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். இன்றைய நாள் செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளம் நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல், இன்று  முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் மஞ்சள்

 

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று  விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாளாக இருக்கும். வீடு, இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் மாற்றும்  சிந்தனை மேலோங்கும். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. இன்று வீண் செலவு ஏற்படும், காரியங்களில் தாமதம் உண்டாகும். உடல் சோர்வு மனச்சோர்வு ஏற்படலாம். மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும், கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. தாய் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

பழைய பாக்கிகள் சிறிய தாமதத்திற்கு பின்னே வந்துசேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை ஏற்படும், அதனால்  எந்த விஷயத்தையுமே நீங்கள் உட்கார்ந்து பேசி தீர்த்துக்கொள்வது ரொம்ப சிறப்பு.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு எப்போதுமே ஒரு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து  காரியங்களும்  சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண் :6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்

 

தனுசுராசி அன்பர்களே…!!  இன்று உங்கள் ராசிக்கு சந்திர பகவான் ஒன்பதாவது இடத்தில் சஞ்சரிக்கிறார். இன்று  எதிலும்பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. திடீர் செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இன்று பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும்அவர்களை விட்டுக்கொடுத்துப் போங்கள். சிலருக்கு வாழ்க்கைத் துணையால் செலவுகள் ஏற்படும்.

தாய்வழி உறவுகளால் சங்கடங்கள் ஏற்படலாம் .வெளியிடங்களில் உங்களின் மதிப்பு உயரும். இன்று நீர்வழி தொழிலால் உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். வாகனப்பயணங்களால் சிறு மாற்றம் ஏற்படும் ஆலய வேலைகளை மேற்கொள்வதற்கான சூழ்நிலை அமையும்.இன்று உங்கலுக்கு நேர்மைக்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் அலுவலகத்தில் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்.வீண் விவாதம் செய்யாதீர்கள் வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் பக்குவமான அணுகுமுறை நல்லது.

இன்று முக்கியமான காரியங்களுக்கு வெளியே  செல்லும் போது வெள்ளை நிற ஆடையை அணிந்துகொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருக பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு.

அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

 

மகர ராசி அன்பர்களே…!! இன்று உங்கள் ராசிக்கு சந்திர பகவான் எட்டாம் இடத்தில் சஞ்சரிப்பதால் குடும்ப உறுப்பினர்களிடம் விவாகத்தை தவிர்க்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்துப் போகவேண்டும். இன்று அரசு தொடர்பான செயல்களில் நிதானத்தை கடைப்பிடிக்க  வேண்டும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு அதிகமாக இருக்கும். இன்று அலுவலகத்தில் பணி சுமை குறைவதால் உற்சாகம் ஏற்படும். நிர்வாகத்தினரிடம் வைத்த கோரிக்கை நிறைவேறும். வியாபாரத்தில் அதிக லாபமும் எதிர்பாராத பண வரவும் இருக்கும்.

இன்று முக்கியமான காரியங்களுக்கு வெளியே செல்லும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை  அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிஷ்ட நிறம் : இளம்சிவப்பு மற்றும் நீல நிறம்

 

கும்பராசி அன்பர்களே..!! இன்று உங்கள் ராசிக்கு சந்திர பகவான் ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பதால் இன்று எதிர்பாராத பணவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இன்று புதிய முயற்சிகள் சாதகமாக முடியும் உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதர வகையில் சுப செலவுகள் ஏற்படும்.சிலருக்கு ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்புகள் அதிகம். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

இன்று மனைவியின் உறவுகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய வீடு வாங்கு வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். கல்வி சம்பந்தப்பட்ட பணிகளில் முன்னேற்றம் கூடும். வேலை செய்யும் இடத்தில் மேன்மையான சூல்நிலை அமையும்.இன்று அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட மறைமுக இடையூறுகள் நீங்கி நிம்மதி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். இன்று பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

இன்று முக்கியமான காரியங்களை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு 

அதிஷ்ட  எண் : 3 மற்றும் 7

அதிஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

 

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள்  ராசிக்கு சந்திர பகவான் 6-ம் இடத்தில்  சஞ்சரிப்பதால் இன்று தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாகஇருக்கும்குலதெய்வப்பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக் கூடும். இன்று பயணத்தின் போது கொண்டு செல்லும் பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். உறவினர்களால் சில பிரச்சனைகள் ஏற்பட கூடும். மனதில் அவ்வப்போது தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

இன்று தைரியத்தோடு புதிய செயல்களில் ஈடுபட்டு பாராட்டப்படுவீர்கள். நண்பர்களால் அனுகூலமான முன்னேற்றங்கள் ஏற்படும். விளையாட்டு வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் மீதான மதிப்பும் மற்றும் மரியாதையும் கூடும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்புகள் இருக்காது .வியாபாரம் சுமாராக தான் இருக்கும்.

இன்று முக்கியமான காரியங்களுக்கு வெளியே செல்லும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *