இன்றைய (28.11.2019) நாள் எப்படி இருக்கு ? முழு ராசி பலன்கள் இதோ..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாளாக  இருக்கும். செல்லும் இடங்களில் சிந்தனை வளர்த்தால் சிறப்பு அடைவீர்கள். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். வழக்குகளில் இருந்த தேக்கநிலை மாறும். இன்று கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உறவினர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வரவுக்கு ஏற்ற செலவு இன்று இருக்கும்.

மற்றவர்கள் பிரச்சனை தீர்வதற்கு கடுமையாக நீங்கள் பாடுபடுவீர்கள். காரியத்தடை தாமதம் போன்றவை கொஞ்சம் இன்று இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கொடுத்த வேலைகளை நேரத்தில் செய்து கொடுப்பது மிகவும் சிறப்பாக இருக்கும். ஆகையால் இன்றைய நாள் உங்களுக்கு சிறப்புமிக்க நாளாகவே இருக்கும். இருந்தாலும் வாகனத்தில் செல்லும்போதும் கொடுக்க வாங்கல் விஷயங்களிலும் இன்று கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். இன்று மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் கொஞ்சம் தடை ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள்.

நிதானமாக செயல்படுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அதுபோலவே இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும். நீங்கள் நினைத்தது நிறைவேறும் நாளாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்

ரிஷபம் ராசி அன்பர்களே..!! திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடைபெறும். திடீர் வரவு திருப்தியை கொடுக்கும். வீடு மனை வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேறும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கூட்டாளிகளால் நன்மை உண்டாகும். இன்று குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். இதுவரை இருந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும்.

இன்று மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். பணவரவில் இருந்த தடை விலகி செல்லும் காரியத்தில் வெற்றி உண்டாகும். உங்களை விட உங்களை சுற்றி இருக்கும் மற்றவர்கள் பயன்படும் விதமாக உங்களுடைய திறமையை பயன்படுத்துவார்கள். காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.

இன்று இல்லத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கும் நாளாக இருக்கும். வெளியூர் பயணங்களால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வருங்கால நலன்கருதி முக்கிய புள்ளிகளை சந்திக்கக்கூடும். புதிய வாகனம் வாங்க கூடிய முயற்சி கைகூடும். இன்று எடுத்த காரியத்தை சாதகமாகவே செய்து முடிப்பீர்கள் .திடீர் மன தடுமாற்றம் ஏற்படலாம் பார்த்துக் -கொள்ளுங்கள். பெரியோர் ஆலோசனை உங்களுக்கு கைகொடுக்கும்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலையை அதிகரிக்கும். கவனமாக பாடங்களைப் படியுங்கள் அது போதும். காரியத்தில் அனுகூலம் இன்று ஏற்படும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு இன்று உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றமும் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்பட்டாலும் வந்து சேர்வதில் எந்த தடையும் இருக்காது.

இன்றையநாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாகவே இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் ஊதா நிறம்

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கும் நாளாக இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். தூரதேசத்திலிருந்து அனுகூல செய்திகள் வந்துசேரும். கூட்டாளிகளால் குழப்பம் கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலனை கொடுக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் பன்மடங்கு உயரும்.

பழைய பாக்கிகள் வசூலாகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளால் டென்ஷன் கொஞ்சம் கூடும். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகளும் கிடைக்கும். விருந்து கேளிக்கை போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளக் கூடிய சூழல் இன்று இருக்கும். கடன் பிரச்சினைகள் அனைத்துமே கட்டுக்குள் இருக்கும். வீண் அலைச்சல் வீண் பயம் போன்றவை குறையும். இன்று அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாகவே பயன்படுத்தும் சாமர்த்தியத்தை  பெறுவீர்கள்.

இன்று உங்கள் திறமைகள் வெளிப்படும். மற்றவர்கள் பார்வையில் நீங்கள் பொறாமைப்படும் அளவிற்கு உயர்ந்து நிற்பீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று மனதிற்கு இனிய சம்பவம் நடைபெறும் நாளாக இருக்கும். மதிப்பும் மரியாதையும் உயரும். கடல் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பாதியில் நின்ற கட்டிடப் பணி மீதியும் தொடரும்.இன்று எந்த ஒரு வேலையையும் அதிக முயற்சி எடுத்து செய்வீர்கள். எதையும் ஆராய்ந்து அதன் பிறகு செய்யுங்கள். இன்று மன பலம் கூடும்.

ஆன்மிகப் பணிகளில் நாட்டம் செல்லும். பணவரவு நல்லபடியாக இருக்கும். காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். கூடுமானவரை மற்றவர்கள் பேசுவதை கூர்ந்து கவனித்து அதற்கு ஏற்றார் போல் பதில் கொடுங்கள். இன்று வீடு வாகனங்கள் தொடர்பான செலவுகள் ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது ரொம்ப பொறுமையாக செல்லுங்கள். அரசியல் துறையை சார்ந்தவர்களுக்கு பொறுப்புகள் இன்று கூடும். உற்சாகமாக எதையும் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய கூடும். இருந்தாலும் ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்

கன்னிராசி அன்பர்களே..!! இன்று பம்பரம்போல் சுழன்று பணிபுரியும் நாளாக இருக்கும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். பாராட்டும் புகழும் கூடும். நினைத்த நேரத்தில் நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். வியாபார விருத்தி உண்டாகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும். குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை கொஞ்சம் கோபத்தை உருவாக்கலாம் பார்த்துக் -கொள்ளுங்கள் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள்.

கணவன் மனைவிக்கு இடையே சின்னதாக கருத்து வேற்றுமை ஏற்படும். பிள்ளைகள் நலனில் அக்கறையும்  காட்டுவீர்கள். இன்று உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெண்களுக்கு எந்த ஒரு முடிவையும் எடுக்கும் போது ஒரு முறைக்கு பல முறை யோசித்து எடுங்கள். கூடுமானவரை பொறுமையை மட்டும் இன்று கடைபிடியுங்கள் அது போதும். மாணவர்கள் கொஞ்சம் கவனத்துடன் பாடங்களை படிப்பது ரொம்ப நல்லது.

அது மட்டுமில்லாமல் சக மானவரிடம் எந்தவித வாக்குவாதங்களும் செய்யாதீர்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாளாகவே இருக்கும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவார்கள். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். இன்று விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல் படுங்கள் அது போதும்.

திடீர் மன தடுமாற்றம் ஏற்படலாம். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சின்ன சின்ன பிரச்சனைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருங்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள்  வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது ரொம்ப நல்லது. இன்று மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் கடினமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள்.

படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் அதிஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று காரிய வெற்றிக்கு கவனமுடன் செயல்படவேண்டிய நாளாக இருக்கும். தொழில் பங்குதாரர்களிடம் மனக்கசப்புகள் ஏற்பட்டு அகலும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு கையிருப்பை கரைக்க வேண்டி இருக்கும். இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றி நல்ல மதிப்பை பெறக்கூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் பயம் இருந்து கொண்டே இருக்கும். அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.

உடல் சோர்வு கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் ஏற்படும். வீடு வாகனம் தொடர்பான செலவுகள் குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் இருக்கட்டும். இன்றையநாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாகவே இருக்கும்.

இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நிறைவேற்றும் போது பச்சை நிறத்தில் செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களை செய்தால் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று தேக்க நிலை மாறி தெளிவு பிறக்கும் நாளாகவே இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உங்களுக்கு கிடைக்கும். புதிய முயற்சிகள் அனைத்துமே வெற்றியை கொடுக்கும். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு உங்களுக்கு கிடைக்கும். வராது என்று நினைத்துக்கொண்டிருந்த பணம் வந்து சேரும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடைகள் விலகி செல்லும். சாதுர்யமான பேச்சு அனைவரையும் கவரும். வியாபாரம் விருத்தியாக நடக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணி தொடர்பாக அலைய வேண்டியிருக்கும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். குடும்பத்தில் இருந்த சிறு சிறு பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மை ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று உறவினர் வருகை இருக்கும். அதனால் கொஞ்சம் செலவும் இருக்கும்.

பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அதனால் வீண் அலைச்சலும் கொஞ்சம் இருக்கும். அதற்கு ஏற்றார் போல் நீங்கள் நடந்துக் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் -போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாளாக இருக்கும். உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். வீடு இடம் சம்பந்தமாக எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து கொடுப்பார்கள். இன்று எடுத்த காரியங்களை சிறப்பாகவே செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். உங்களுடைய சாதுர்யமான பேச்சு வெற்றிக்கு உதவும்.மாணவர்கள் பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள்.

திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு வழிவகுக்கும். போட்டிகளும் பொறாமைகளும் குறையும். இன்று எல்லாவற்றிலும் நன்மை இருக்கும். அரசியல் துறையினருக்கு அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடிக் கொடுக்கும். இன்றைய நாள் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும்.

தூரதேசத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அதுபோலவே இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று வாய்ப்புகள் உங்கள் இல்லம் தேடி வரும். உங்களுடைய வளர்ச்சி இன்று சிறப்பாக இருக்கும். வருமானம் பற்றாக்குறை அகல புதிய வழிபிறக்கும். தாய்வழி உறவினர்களால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகிச்செல்லும். சுபச் செய்திகள் வந்து சேரும். இன்று அடுத்தவர்களை அனுசரிக்க போய் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத செலவு மட்டும் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.

சிந்தித்து செயல்படுங்கள் நன்மையை  கொடுக்கும். பணவரவும் இருக்கும். அடுத்தவர் நலனுக்காக கொஞ்சம் பாடுபட வேண்டியிருக்கும். பெரியவரின் ஆலோசனையும் கிடைக்கும். உதவியும் கிடைக்கும். காரிய தடைகள் கொஞ்சம் வரும் பார்த்துக்கொள்ளுங்கள். வழக்குகளில் சாதகமான போக்கை இன்று சந்திக்கக்கூடும். நண்பரிடம் ரொம்ப கவனமாக பேசுங்கள்.

மாணவர்கள் கல்வியில் இருந்த தடை நீங்கி முழு முன்னேற்றத்தைக் காண்பார்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுப்பதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று நினைத்ததை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். நேச மனப்பான்மை கொண்டவர்களின் உதவிகள் கிடைக்கும். வருங்கால நலன்கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். நண்பர்களுடன் அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. இன்று வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்குவாதங்களும் இருக்கும்.

கூடுமானவரை வாக்குவாதங்களை மட்டும் தவிர்த்துவிடுங்கள். அக்கம்பக்கத்தினரிடம் பேசும்போது கொஞ்சம் அன்பாக பேசுங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணி ஆற்றுவது நல்லது. புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் நல்ல பலன்கள் கிடைக்கும். கூடுமானவரை இன்று வாக்கு வாதத்தை மட்டும் கட்டுப்படுத்தி விட்டால் அனைத்து காரியங்களும் நன்மையில் முடியும். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு சிறுசிறு தடைகள் இருக்கும்.

தடைகளை தாண்டி இன்று நீங்கள் முன்னேறிச் செல்லுங்கள். கூடுமானவரை ஆசிரியர்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். சக மாணவரிடம் நீங்கள் கடுமையை  காட்டாமல் நடந்துகொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வெளிப்பாட்டை மேற்கொள்ளுங்கள். காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *