இன்றைய நாள் (13.01.2020) எப்படி இருக்கு?…. முழு ராசி பலன் இதோ!!

மேஷம் ராசி அன்பர்களே…!! இன்று எதிர்பார்த்த காரியம் வெற்றியை கொடுக்கும். சந்தோஷத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி ரொம்ப சிறப்பாக நடக்கும். கூடுதல் வருமானம் கிடைக்கும். மனைவியின் அன்பினால் மகிழ்வீர்கள்.இன்று தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் கொஞ்சம் ஏற்படக்கூடும். நண்பர்களை கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. கடன் கொடுக்கும்போது கவனமாக இருங்கள்.

உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும். தொழில் வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உருவாகும். தொழில் வியாபாரத்தில் வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும். இன்று மாணவக் கண்மணிகள் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும், சக மாணவர்களின் ஒத்துழைப்பும் முழுமையாகவே கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், காவி நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்காளுக்கான அதிஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிஷ்ட நிறம்: காவி மற்றும் வெள்ளை நிறம்

ரிஷபம்ராசி  அன்பர்களே…!!  இன்று செயல்களில் நியாயம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் ஏற்படும். கூடுதல் பணவரவு கிடைக்கும். ஊட்டச் சத்து உண வினை உண்டு மகிழ்வீர்கள் இன்று குடும்பத்தில் ஏதாவது சில்லறை சண்டைகள் கொஞ்சம் ஏற்படலாம். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை இருக்கும்.  உங்களுடைய சகோதரர்கள் மற்றும் தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிக்கும்  துணிச்சல் உண்டாகும்.

எதிர் பார்த்த பண உதவியும் கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றம் கூட  ஏற்படலாம். எதை செய்வது   எதை விடுவது என்ற மனத் தடுமாற்றம் கொஞ்சம்  இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று காதலர்களுக்கு சிறப்பான நாளாகவே இன்றைய நாள் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் ஆசிரியர்களின் முழு  ஒத்துழைப்பும் கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை   :   தெற்கு

 அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்

மிதுனம் ராசி அன்பர்களே…!! கடந்தகால சிரமத்தை பிறரிடம் சொல்ல வேண்டாம். அதிக உழைப்பால் பணி இலக்கு நிறைவேறும். சீரான பண வரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை மட்டும் உண்ண வேண்டாம். இன்று வெளியூர் பயணத்தில் மாற்றம் செய்வீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இதுவரை இருந்த தொய்வு நிலை நீங்கி லாபம் பன்மடங்கு உயரும். இனிமையான பேச்சு மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பெண்கள் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவார்கள்.வீண் அலைச்சலும் உண்டாகும். செயல்களில் வேகம் இருக்கும். இன்றைய நாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாகத்தான் இருக்கும். காதலர்களுக்கு இன்று நாள் ரொம்ப சிறப்பான நாளாகவே அமையும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் மஞ்சள்

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் அடுத்தவர் மீதான நம்பிக்கை உங்களுக்கு குறையும். பணிகளை பொறுப்புடன் நிறைவேற்றுவிர்கள். தொழில் வியாபாரத்தில் உள்ள மந்த நிலை மாறும். சேமிப்பு பணம் செலவாகும். நித்திரை கொஞ்சம் தாமதப்பட்டு தான் இன்று வந்து சேரும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு நித்திரைக்கு செல்வது ரொம்ப சிறப்பு. இன்று குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும் கணவன் மனைவிக்கு இடையே திருப்தியான உறவு நிலை காணப்படும்.

பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். தைரியம் கூடும். எல்லா விதத்திலும் உங்களுக்கு நன்மையே ஏற்படும். சகோதரர்களால் உங்களுக்கு நன்மை ஏற்படும். காரியம் வெற்றி இருக்கும். பணவரவை பொருத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் எதிர்பாலினத்தவரிடம் பழகும் போது மட்டும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள்.

அது மட்டுமில்லாமல் கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் சிறப்பாக இருந்தாலும் கடன்கள் மட்டும் நீங்கள் ஏதும் வாங்க வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் பச்சை நிறம் அதிஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: வெளிர் பச்சை மற்றும் நீலம்

சிம்மம் ராசி அன்பர்களே…!! இன்று  நண்பர்களிடம் சொந்த விஷயத்தைப் பற்றி பேசாதீர்கள். தீர்வுகாண ஆலோசனை கிடைப்பதற்கு கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். தொழில் வியாபார வளர்ச்சி எளிதில் நிறைவேறும். இன்று பண வரவு அதிகரிக்கும். வெகுநாளாக தேடிய பொருள் புதிய முயற்சியால் கிடைக்கும். திட்டமிட்டபடி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும்.

இன்று மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். சக மாணவர்களுடன் சுமுகமான உறவு காணப்படும். எதிர்பார்த்த பணவரவு தாராளமாக இருக்கும். உங்களுடைய செயல் திறமை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் அதிக உதவிகளை செய்யும் முன் யோசித்து செய்யுங்கள். கடன்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று ஓரளவு சிறப்பாக இருக்கும். அதிஷ்டம் கூட தேடி வரக்கூடும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீலநிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் நீல நிறம் இன்று உங்களுக்கு அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிஷ்ட நிறம் : நீளம் மற்றும் இளம் பச்சை நிறம்

கன்னி ராசி அன்பர்களே…!! இன்று நண்பர்களின் ஆலோசனை உங்களை நல்வழியில் செயல்பட ஊக்கத்தைக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை முடிப்பது அவசியம். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். உணவினை தரம் அறிந்து உண்ணுங்கள். இன்று எதிர்ப்புகள் விலகி செல்லும். குடும்பப் பிரச்சினைகள் தீரும் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும் அதுமட்டுமில்லாமல் வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழுவீங்கள். வாக்கு வன்மை கூடும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி விடுவீர்கள்.

அறிவுத்திறன் அதிகரிக்கும். உங்களுக்குப் பெயரும் புகழும் கூடும். உங்களைப் பற்றி யாராவது அவதூறு பேசினால் கண்டு கொள்ளாமல் ஒதுங்கி விடுவது ரொம்ப நல்லது. விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் செல்லும். எடுத்த காரியத்தை சிறப்பாகச் செய்வீர்கள். அது மட்டுமில்லாமல் ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்புடன் அனைத்து விஷயங்களையும் சிறப்பாக மேற்கொள்வீர்கள்.

விளையாட்டுத்துறையில் கொஞ்சம் ஆர்வம் செல்லும் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்

துலாம் ராசி அன்பர்களே..!!  இன்று சமூகத்தில் நல்ல மதிப்பீடு உருவாகும். நண்பரின் உதவி எளிதாக கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். வீட்டு உபயோக பொருட்களை வாங்கக்கூடும். ஓய்வு நேரத்தில் இசையை ரசித்து மகிழ்வீர்கள். இன்று பெண்களுக்கு சமையல் செய்யும் பொழுது கவனம் இருக்கட்டும். எதிலும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.

மாணவர்கள் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக பயன்படுத்த வேண்டும். பாடங்களை கவனமாக படிப்பது ரொம்ப நல்லது. குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவற்றை வாங்குவீர்கள். அதாவது குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கக்கூடும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். அன்பு பெருக்கெடுத்து ஓடும். புத்தி சாதுர்யமும், அறிவுத்திறனும், இன்று அதிகரிக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா மற்றும் இளம் பச்சை நிறம்

விருச்சிகம் ராசி அன்பர்களே..!!  இன்று சிறு செயலும் கடினமாகத் தோன்றலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை நல்வழியை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அனுகூலத்தை பாதுகாக்கவும். பண வரவு சீராக இருக்கும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்றவும். இன்று எல்லா பிரச்சனைகளும் சரியாகும். குடும்ப ஒற்றுமை ஏற்படும். வீண் வாக்குவாதங்கள் கொஞ்சம் உண்டாகலாம், அதை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள்.

மனதில் உற்சாகம் பிறக்கும். வீண் பகை கூட ஏற்படலாம், அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். தீ ஆயுதங்களை கையாளும் பொழுது ரொம்ப கவனமாக கையாள வேண்டும். நண்பர்களிடமிருந்து பிரிய வேண்டியிருக்கும். கௌரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த பணவரவு கொஞ்சம் தாமதப்பட்டு தான் வந்து சேரும். திடீர் சோர்வு போன்றவை ஏற்படும். அடுத்தவரிடம் உங்களது செயல் திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. அதேபோல மற்றவரிடம் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

இன்று மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். மேற்கல்விக்கான  முயற்சியில் வெற்றி கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். காவி நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் மற்றும் காவி நிறம்

தனுசு ராசி அன்பர்களே..!!  இன்று கடந்தகால உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் செயல்திறனை பிறர் பாராட்டுவார்கள். தொழில் வியாபாரம் செழிக்கும். வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப தேவையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்ப பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம் உங்களுக்கு சீராக இருக்கும். எதிர்ப்பாலினத்தவரால் நன்மை ஏற்படும். வீண் செலவு கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும் நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் ரொம்ப சிறப்பாக இன்று இருக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நல்ல மதிப்பை நீங்கள் பெற முடியும். அது போல இன்று வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமும் இருக்கும்.

இன்று மாணவக் கண்மணிகள் கல்வியில் நல்ல ஆர்வமுடன் காணப்படுவார்கள். படித்த பாடத்தை மட்டும் ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள், அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

மகரம் ராசி அன்பர்களே..!!  இன்று நட்பின் பெருமையை நீங்கள் உணர்வீர்கள். எதிர்கால வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அரசியல் வாதிகள் பதவி உயர்வு இன்று பெறலாம். தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம், நல்ல முன்னேற்றமான சூழ்நிலை சந்திக்கக்கூடும். லாபம் கொஞ்சம் குறைவாகத்தான் வரும் கவலை வேண்டாம். சிறப்பாகவே அனைத்தும் நடக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயல் ஆற்றுவது ரொம்ப நல்லது. இன்று வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக செல்ல வேண்டும். யாரிடமும் எந்தவித கடன்கள் மட்டும், இன்று வாங்காதீர்கள். அதுமட்டுமில்லாமல் வாக்குவாதங்கள், யாரிடமும் செய்யாதீர்கள். இன்று மாணவர்கள் மிக முக்கியமாக சக மாணவரிடம் எந்தவித வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. மிகவும் கவனமாக பாடங்களைப் படியுங்கள், வெற்றிக்கு உதவும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் மற்றும் மஞ்சள் நீரும்

கும்பம் ராசி அன்பர்களே..!!  இன்று மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் பேச வேண்டாம். மன அமைதியை பாதுகாப்பதால் செயல்கள் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் உருவாகும் குளறுபடியை சரிசெய்வீர்கள். சீரான பண வரவு கிடைக்கும். உறவினர் வகையில் செலவு அதிகமாகும். இன்று குடும்ப நிம்மதி கொஞ்சம் குறையக்கூடும். கணவன் மனைவிக்கு இடையே மனம் வருந்தும் படியான நிலை இருக்கும்.

வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எல்லாவற்றிலும் இன்று லாபம் கிடைக்க கூடிய சூழ்நிலை இருக்கும். உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள், மீண்டும் வந்து உங்களை நாடிவரக்கூடும்.  நன்மை தீமை பற்றிய கவலையில்லாமல் தலைநிமிர்ந்து நடப்பீர்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது மட்டும் நல்லது. மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது ரொம்ப கவனமாக செய்ய வேண்டும்.

மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித தடையுமில்லை மேற்கல்விக்கான முயற்சியில் வெற்றி வாய்ப்புக்கள் இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெளிர் நீல நிறம்

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று வழக்கத்திற்கு மாறான பணி உங்களுக்கு தொந்தரவைக் கொடுக்கும். செயல் நிறைவேற கூடுதல் கவனம் இருக்கட்டும். தொழில் வியாபாரத்தில் அரசின் சட்டத்திட்டத்தினை தவறாமல் பின்பற்றவும். பணச் செலவில் சிக்கனம் இருக்கட்டும். பெண்கள் நகையை இரவலாக கொடுக்க வேண்டாம். இன்று எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். செலவு அதிகரிக்கும். பயணம் செல்ல நேரிடும்.

மாணவர்கள் கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புக்கள் கூடும். பெண்கள் யாரையும் எதிர்த்து கொள்ளாமல் அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. வீண் மனக்கவலை காரிய தாமதம் போன்றவை வந்து செல்லும், கவனமாக இருங்கள். பிள்ளைகளிடம் அன்பு கூடும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். இன்று திருமண முயற்சிகள் வெற்றி வாய்ப்பைக் கொடுக்கும். காதலர்களுக்கு இனிய நாளாக இன்றைய நாள்அமையும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், அனைத்து காரியமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *