எப்படி இருக்கீங்க? “நல்லா இருக்கேன்” 6 மொழியில் அசத்தும் தோனி மகள்….வைரலாகும் வீடியோ…!!

எப்படி இருக்கீங்க என்று தோனி தனது மகளுடன் 6 மொழிகளில் பேசும் வீடியோ தற்போது சமுக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது..

இந்திய கிரிக்கெட் அணியின் தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் மஹேந்திரசிங் தோனி . இவரின் தலைமையில் இந்திய அணி பல்வேறு தொடர்களை வென்று  சாதித்துள்ளது . மேலும் இளம் தலைமுறையினருக்கு வழிவிட வேண்டுமென்று கேப்டன் பொறுப்பை விராட் கோலியிடம் ஒப்படைத்து அணியின் ஒரு நபராக ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் களமிறங்கி ஆடி வருகின்றார்.

Image result for தோனி

சில நேரங்களில் தோனி_க்கு வயதாகி விட்டது என்று விமர்சனம் எழும் போதெல்லாம் தன்னுடைய அசத்திய திறமைகளை வெளிப்படுத்தி தன்னை நிரூபித்துக்கொண்டே இருப்பார். பேட்டிங் , பில்டிங் என அனைத்திலும் தன்னுடைய சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றார். குறிப்பாக விக்கெட் கீப்பிங்_கில் தோனியை மிஞ்சுபவர் யாரும் இல்லை என்று கூட சொல்லலாம்.

Image result for தோனியின் மகள்

கேப்டன் பொறுப்பில் இருந்தும் , டெஸ்ட் போட்டிகளிலும் இருந்து தோனி விடுவிக்கப்பட்ட பிறகு தனது நேரத்தை குடும்பத்துடனும் , அவரின் மகளுடனும் செலவழித்து வருகின்றார் .  தந்தை மிஞ்சும் குழந்தை என்று சிறு வயதிலேயே பல்வேறு பெயர் பெற்றவர் தோனியின் அழகு மகள் ஸிவா . தோனிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அவ்வளவு ரசிகர்களும்  ஸிவா_வுக்கும் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம் . சில நேரங்களில் தனது மக்களுடன் பேசும் , விளையாடும் வீடியோ_வை தனது ட்வீட்_டர் பக்கத்தில் தோனி பதிவிடுவார் இதை ஸிவா_வின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தற்போது IPL தொடரில் சென்னை அணியின் கேப்டனாக தோனி விளையாடி வருகின்றார். இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது . தோனி தன்னுடைய மகளுடன் எப்படி இருக்கீங்க என்று  தமில் , இந்தி , வங்கம் மற்றும் உருது உட்பட 6 மொழிகளில் பேசுகிறார் . அதற்கு தோனி_யின் மகள் நல்லா இருக்கேன் என்று 6 மொழிகளிலும் பதிலளிக்கிறார். இது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிறது.