இதுலயும் அரசியல் வசனம் இருக்கு….. பிகில் படம் எப்படி இருக்கு ? விமர்சனம் …!!

நடிகர் விஜய் நடிப்பில் பல்வேறு தடைகளை கடந்து இன்று பிகில் படம் வெற்றிகரமாக வெளியாகியுள்ளது.

பிகில் படத்தைகால்பந்து விளையாட்டை மையமாக கொண்ட எடுத்திருக்காங்க. இது விஜய்யின்  63 வது படம் இந்த படம். இந்த படம் வழக்கமான விஜய் படம் மாதிரி எல்லா பிரச்சனைகளை சந்தித்து , கதை மேல வழக்கு தொடுக்கப்பட்டு  இன்று வெற்றிகரமாக வெளிவந்துள்ளது. படத்துக்கு தியேட்டரில் கூட்டத்தை பார்க்கும் போது இந்த படம் கண்டிப்பாக பிளாக் பூஸ்டர் ஹிட் என்று யாராலும் மறுக்க முடியாது. இது மட்டுமில்ல கேரளாவில் விஜய்க்கு சிலை வச்சிருக்காங்க .

பிகில் இந்தி படத்தை காப்பி அடித்து எடுக்கப்பட்டது அப்படி , இப்படினு சொன்ன எல்லாத்துக்கும் தியேட்டர்ல பதில் கிடைக்கும். அந்த ஹிந்தி படத்தின் மையக் கருத்தும் இந்த படத்தோட மையக் கருத்தும் ஓன்று தான்.இதை தவிர படத்தில் வேறு எந்த சம்பந்தம் கிடையாது. அதே நேரத்தில் பிகில் படத்தோட ஸ்கிரீன்பிளே எல்லாத்தையும் பார்க்கும்போது பிகில் படத்தைப் பார்த்தது தான் அந்த ஹிந்தி படம் எடுத்து இருக்காங்களா ? அப்படிகின்ற டவுட் எல்லாத்துக்கும் வரும் அந்த அளவுக்கு அருமையா ஸ்கிரீன்பிளே கொடுத்திருக்காங்க.

ஒரு கிராமத்திலிருந்து புட்பால் விளையாடும் வாய்ப்பு கிடைக்காத ஒரு பெண்களை வைத்து ஒரு புட்பால் ரெக்கார்டு கிரியேட் பண்ணுறது தான் இந்த படத்தோட கதை.படத்துல வருகின்ற ஒவ்வொரு சீன்னும் செமயை , அருமையா இருக்கும்.  அதுல அப்பா விஜய்  நாலு சீன் வந்துட்டு போனாலும்  நடிப்புல தூள் கிளப்பி இருப்பார். என்ன ஒரு நடிப்பு , அப்படின்னு நமக்கு சொல்லத் தோணும்.  ஏமோஷனல் சீன்னாக இருந்தாலும் சரி , அதிரடி சீன்னாக சரி அவருடைய நடிப்பு வெறித்தனம்னு தான் சொல்லணும்.

அடுத்தது புட்பால் விளையாடுற விஜய் .  மகன் விஜய்யாக வரும் போது என்ன வயசு ஆச்சுனு கண்டுபிடிக்க முடியாது. வயசு ஆகிட்டா? இல்லையா ? என்று கூட தெரியாது. ஒரு 22 வயசு பையன் மாதிரி விஜய்யோட  நடிப்பு ஃபுட்பால் கிரவுண்ட்ல அவருடைய இளமைத் துடிப்பான விளையாட்டு என சூப்பராக இருக்கும்.விஜய்யோட டெடிகேஷன் , நடனம் என விஜய்யின் அசாத்திய  நடிப்புத் திறமை மட்டும் தான் அவர இவ்வளவு பெரிய உட்சத்துல வச்சு இருக்கு.

அப்பறம் நயன்தாரா மற்ற படங்களில் நடிகை எப்பவுமே ஹீரோ கூட தேவையில்லாம சுத்திகிட்டு இருப்பாங்க. இந்த படத்துல அந்த மாதிரி தேவை இல்லாத சீன் இல்லாம  படத்துக்கு என்ன தேவையோ அதுல மட்டும் நடித்துள்ளனர்.  இந்த படத்தில் விஜய்க்கும் , நயன்தாராவையும் வயசு ஏறுதா ? இறங்கு தானே கண்டுபிடிக்க முடியாது. நடிகர் விஜய்க்கு எந்த அளவுக்கு முக்கியதத்துவம் கொடுத்து இருப்பாங்களோ அதே அளவு பெண்களுக்கும் இந்த படத்துல  இம்பார்ட்டன்ஸ் கொடுத்து இருக்காங்க. படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது படத்தில் நடித்த ஒவ்வொரு கேரக்டரும் நம்ம மனசுல நிக்குது , அதற்கு மிகப்பெரிய காரணம் படத்தின் கதையும் அதுக்கு ஏத்த திரைக்கதையும் தான் .படம் பார்க்கின்ற  நமக்கே தெரியும்.

ஒரு சீன் கூட போர் அடிக்கிற மாதிரி இல்லை. ஒவ்வொரு சீனும் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு கிளம்புவது தான் இந்த படத்தோட மிகப்பெரிய வெற்றிக்கு ஒரு காரணம். படத்தில் வில்லனாக ஜக்கி ஜெரிப் நடித்திருக்கிறார்.பல படங்களில் வரும் வில்லனை விட இந்த படத்தில் உள்ள வில்லன் கொஞ்சம் ஸ்பெஷலா இருக்காரு.வழக்கமா தமிழ் படங்களில் எப்போதுமே முதல் கட்சியிலே  வில்லன் ஹீரோ கிட்ட மூக்கறு பட்டுருவாரு. அந்த மாதிரி எந்த சீனும் இந்த படத்துல இல்ல. ஹீரோவை போலவே வில்லனையும் சிந்திக்க வைத்திருப்பது இந்த படத்தோட ஸ்பெஷல்.

காமெடியில் விவேக் , யோகி பாபு  நடித்துள்ளனர். யோகிபாபுவை பார்த்தாலே சிரிப்பு வரும் ரொம்ப நாளைக்கு அப்புறம் காமெடி ரசிக்கும்படியாக இருந்தது இந்தப் படத்தில்தான் மியூசிக் ஏ ஆர். ரகுமான் மியூசிக் இந்த படத்தில் பின்னி எடுத்திருக்கிறார் அப்படித்தான் சொல்லவேண்டும்.  குறிப்பாக விஜய் வர்ற சீன்ல சும்மா தியேட்டரை அதிர வைத்துள்ளார்.இந்த படத்தோட வெற்றிக்கு முக்கிய காரணம் படத்தில் ஒவ்வொரு கேரக்டரும் தனியா செதுக்கி இருக்காங்க. படம் பார்த்துட்டு வெளியே வரும் நமக்கு ஒவ்வொரு கேரக்டரும் அப்படி மனசுல நிக்குது.

வேண்டா வெறுப்புக் படம் பார்க்கப் போனால் கூட எழும்பி நின்று கைதட்டும் அளவுக்கு இந்த படத்தை அப்படி செதுக்கி வச்சிருக்காங்க.படத்துல பாசிட்டிவ் மட்டும்தான் இருக்கானு கேட்டா கண்டிப்பா நெகட்டிவ்_வும் இருக்கு. படத்துல கிராபிக்ஸ் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணி இருக்கலாம். அதற்கு டிரைலலேயே நமக்கு தெரியும். ஆனால் தமிழ் சினிமாவுக்கு இந்த கிராபிக்ஸ் போதும்னு சொல்லலாம். விஜயின் எல்லா படத்தையும் போல பிகில் படத்திலும் அரசியல் வசனம் எல்லாம் இருக்கு. படத்தின் ஸ்கிரீன்பிளே எல்லாம் நல்லாவே இருக்கு . படத்தின் ரன்னிங் டைம் படத்தை கொஞ்சம் கூட பாதிக்காது. மொத்தத்துல பிகில் படம் ஒரு வெறித்தனமான படம் என்று தான் சொல்லவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *