வீட்டு “வாடகை ஒப்பந்தம்”120 நாட்களாக நீட்டிப்பு…பேரவையில் OPS அறிவிப்பு…!!

வீட்டு வாடகை ஒப்பந்தங்களை மேற்கொள்ள கால அவகாசத்தை நீட்டிக்கும்  சட்டத் திருத்த மசோதாவை  சட்டப்பேரவையில் O.பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ளார்.

தமிழக சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள்  நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்றைய சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் முடிவில் துணை முதலமைச்சர் O.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

Image result for பன்னீர்செல்வம் பேரவை பேச்சு

அதில், சொத்து உரிமையாளரும், வாடகைதாரரும் வாடகை ஒப்பந்தங்களை எழுத்துப்பூர்வமாக மேற்கொள்ள வேண்டும் என்ற சட்டத்திருத்தம் ஏற்கனவே நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.அதன்படி, உரிமையாளரும், வாடகைதாரரும் 90 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த கால அவகாசத்தை 120 நாட்களாக நீட்டிக்கும் மசோதாவை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.